Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Chorus : Om om om om om….
Male : Omena olippathu ongaara naatham
Omena olippathu ongaara naatham
Adhai aamena uraippathu naal vagai vedham
Thaamena ninaikkum tharukkarai adakkum
Thaamena ninaikkum tharukkarai adakkum
Omena thudhikkum devi un paatham
Chorus : Om om om….
Male : Omena olippathu ongaara naatham
Male : Panneer abishegam seitha perukku
Vaazhvin kanneerai maattri vaikkum karumaari
Female : Nalla paalaal abhishegam seitha perukku
Inbam paalaattam ponga vaikkum karumaari
Male : Thiruneeraal abhishegam seitha perukku
Thunbam neeraaga poga vaikkum karumaari
Female : Konda kungumaththaal abhishegam seitha perukku
Nettri kungumaththai nilaikka vaikkum karumaari
Male : Nalla santhanaththaal Abhishegam seitha perukku
Nenjam santhanam pol manakka vaikkum karumaari
Female : Thooya manjal neeril abhishegam seitha perukku
Thaali manjalukku kaaval nirkkum karumaari
Thooya manjal neeril abhishegam seitha perukku
Thaali manjalukku kaaval nirkkum karumaari
Male : Endrum bakthikkum endrum bakthikku
Bakthiyodu abhishegam seitha perukku
Both : Dheiva sakthi vanthu sera vaikkum karumari
Female : Naakkaadu pala poigal namai vittu poga
Nokkaadu theernthu ullam nalamenbathaaga
Naakkaadu pala poigal namai vittu poga
Nokkaadu theernthu ullam nalamenbathaaga
Male : Theekkaadu pol pattrum theemaigal azhiya
Theekkaadu pol pattrum theemaigal azhiya
Vekkaadu pol vaattum vinai muttrum ozhiya
Male : Saakkaadu pol soozhum saabangal tholaiya
Saakkaadu pol soozhum saabangal tholaiya
Pookkaadu pol inbam pozhuthodu vilaiya
Female : Verkkaadu thanai meavi vaazhgindra devi
Verkkaadu thanai meavi vaazhgindra devi
Venthaamarai paatham vandaaga moippom
Both : Venthaamarai paatham vandaaga moippom
Chorus : Omsakthi omsakthi omsakthi om
Omsakthi omsakthi omsakthi om
Omsakthi omsakthi omsakthi om…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்……
ஆண் : ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்
ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்
அதை ஆமென உரைப்பது நால் வகை வேதம்
தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும்
தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும்
ஓமென துதிக்கும் தேவி உன் பாதம்
குழு : ஓம் ஓம் ஓம்…….
ஆண் : ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்
ஆண் : பன்னீர் அபிஷேகம் செய்த பேருக்கு
வாழ்வின் கண்ணீரை மாற்றி வைக்கும் கருமாரி
பெண் : நல்ல பாலால் அபிஷேகம் செய்த பேருக்கு
இன்பம் பாலாட்டம் பொங்க வைக்கும் கருமாரி
ஆண் : திருநீரால் அபிஷேகம் செய்த பேருக்கு
துன்பம் நீராக போக வைக்கும் கருமாரி
பெண் : கொண்ட குங்குமத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு
நெற்றி குங்குமத்தை நிலைக்க வைக்கும் கருமாரி
ஆண் : நல்ல சந்தனத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு
நெஞ்சம் சந்தனம் போல் மணக்க வைக்கும் கருமாரி
பெண் : தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு
தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி
தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு
தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி
ஆண் : என்றும் பக்திக்கு என்றும் பக்திக்கு
பக்தியோடு அபிஷேகம் செய்த பேருக்கு
இருவர் : தெய்வ சக்தி வந்து சேர வைக்கும் கருமாரி
பெண் : நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக
நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக
நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக
நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக
ஆண் : தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய
தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய
வேக்காடு போல் வாட்டும் வினை முற்றும் ஒழிய
ஆண் : சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய
சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய
பூக்காடு போல் இன்பம் பொழுதோடு விளைய
பெண் : வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி
வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி
வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்….
இருவர் : வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்….ஓம்..
குழு : ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்……
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்