Singers : T. M. Soundararajan, Kovai Soundararajan and Sasirekha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Ayoththi nagaraalum arasakumaran
Ayoththi nagaraalum arasakumaran
Anbulla janaki un manavaalan
Anbulla janaki un manavaalan
Vanavaasam seiyya vantha raguraman
Un vadivinai kaana vanthaen maravaamal
Male : Kanmani vaithaegi kalangaathae
En kadhal marainthathendru mayangathae
Kanmani vaithaegi kalangaathae
En kadhal marainthathendru mayangathae
Kann vannam kaatta vanthaen unnai paarththu
Kann vannam kaatta vanthaen unnai paarththu
En kai vannam kaatta vanthaen anaitheduththu
Female : Anu dhinamum edhirpaarththaen aariya selvaa
Un anbu mugam thavira oru sinthanai undaa
En uyirae…..en uyirae en thalaivaa sundhararaama
Intha ilangaiyai un kangal vellum kodhandarama
Kodhandarama……aaa…….aa…..
Female : Ullam karuththu ennam siruththu
Ennai nerungu ravananae
Ennil neruppu eriyum adharkku
Thannai koduththa kavalanae
Male : Mannan enakku mannum vanangum
Vinnum vanangum janakiyae
Mannan enakku mannum vanangum
Vinnum vanangum janakiyae
Vedham unarnthu geetham arintha
Vendhan virumbum naayagiyae…
Aa….naayagiyae…aa….naayagiyae…
Female : Mangaiyar karpinai ondru thirattiya
Mythili maeniyai thoduvaayo
Mannai mananthavan vinnai alanthavan
Mangaiyin aasaiyil thoduvaayo….
Male : Nandru madakkodi munnai mozhippadi
Ennai veruththavar kidaiyaathu
Mannan ninaippathil kallam iruppinum
Kuttram unarththida mudiyaathu…
Female : Sakthi thaththuvam seethaiyin jananam
Thaththuvam arivaai ada moodaa
Male : Bakthi thaththuvam ravanan vaazhvu
Bakthi sakthiyum udaiyavan naan
Female : Ennai nerungida mannaaavaai
Male : Ennai anainthoru kannaavaai
Female : Kanalaavaen…
Male : Punalaavaem….
Female : Thoduvaayo….
Male : Mudiyaatho….
Male : Elloru anupavikkum vaayuvin magan naan
Sri rama thoodhanammaa en peyar hanumaan
Jeyaram jayaram jeyaram jeyaram
Ram ram ram ram ram ram
Male : Elloru anupavikkum vaayuvin magan naan
Sri rama thoodhanammaa en peyar hanumaan
En peyar hanumaan
Female : Maan pol veshaththil maarisan
Andru mamuni veshaththil ravanan
Maan pol veshaththil maarisan
Andru mamuni veshaththil ravanan
Female : Raman veshaththil ingu vanthaai
Oru naal kurangaai maari vittaai
Raman veshaththil ingu vanthaai
Oru naal kurangaai maari vittaai
Male : Kanaiyaazhi kondu vanthaen
Kanaiyaazhi kondu vanthaen
Kanaiyaazhi kondu vanthaen
Kanaiyaazhi kondu vanthaen mayamillai
Ungal kanavan koduththathuthaan vaangavillai
Amma kanaiyaazhi kondu vanthaen kaanavillai
Kaanavillai…..kaanavillai……..kaanavillai….
Kaanavillai…..kaanavillai……..kaanavillai….
Kanaiyaazhi kaanavillai……..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், கோவை சௌந்தரராஜன்
மற்றும் சசிரேகா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : அயோத்தி நகராளும் அரசகுமாரன்
அயோத்தி நகராளும் அரசகுமாரன்
அன்புள்ள ஜானகி உன் மணவாளன்
அன்புள்ள ஜானகி உன் மணவாளன்
வனவாசம் செய்ய வந்த ரகுராமன்
உன் வடிவினைக் காண வந்தேன் மறவாமல்
ஆண் : கண்மணி வைதேகி கலங்காதே
என் காதல் மறைந்ததென்று மயங்காதே
கண்மணி வைதேகி கலங்காதே
என் காதல் மறைந்ததென்று மயங்காதே
கண் வண்ணம் காட்ட வந்தேன் உன்னைப் பார்த்து
கண் வண்ணம் காட்ட வந்தேன் உன்னைப் பார்த்து
என் கை வண்ணம் காட்ட வந்தேன் அணைத்தெடுத்து….
பெண் : அனுதினமும் எதிர்ப்பார்த்தேன் ஆரியச் செல்வா
உன் அன்பு முகம் தவிர ஒரு சிந்தனை உண்டா
என் உயிரே……என் உயிரே என் தலைவா சுந்தரராமா
இந்த இலங்கையை உன் கண்கள் வெல்லும் கோதண்டராமா
கோதண்டராமா……..ஆஅ….ஆ….
பெண் : உள்ளம் கறுத்து எண்ணம் சிறுத்து
என்னை நெருங்கும் ராவணனே
என்னில் நெருப்பு எரியும் அதற்கு
தன்னைக் கொடுத்த காவலனே….
ஆண் : மன்னன் எனக்கு மண்ணும் வணங்கும்
விண்ணும் வணங்கும் ஜானகியே
மன்னன் எனக்கு மண்ணும் வணங்கும்
விண்ணும் வணங்கும் ஜானகியே
வேதம் உணர்ந்து கீதம் அறிந்த
வேந்தன் விரும்பும் நாயகியே…..
ஆ……நாயகியே……ஆ….நாயகியே…..
பெண் : மங்கையர் கற்பினை ஒன்று திரட்டிய
மைதிலி மேனியைத் தொடுவாயோ
மண்ணை மணந்தவன் விண்ணை அளந்தவன்
மங்கையின் ஆசையில் தொடுவாயோ…..
ஆண் : நன்று மடக்கொடி முன்னை மொழிப்படி
என்னை வெறுத்தவர் கிடையாது
மன்னன் நினைப்பதில் கள்ளம் இருப்பினும்
குற்றம் உணர்த்திட முடியாது…..
பெண் : சக்தித் தத்துவம் சீதையின் ஜனனம்
தத்துவம் அறிவாய் அட மூடா
ஆண் : பக்தித் தத்துவம் ராவணன் வாழ்வு
பக்திச் சக்தியும் உடையவன் நான்
பெண் : என்னை நெருங்கிட மண்ணாவாய்
ஆண் : என்னை அணைந்தொரு கண்ணாவாய்
பெண் : கனலாவேன்……..
ஆண் : புனலாவேன்………
பெண் : தொடுவாயோ………..
ஆண் : முடியாதோ…….
ஆண் : எல்லோரும் அனுபவிக்கும் வாயுவின் மகன் நான்
ஸ்ரீராம தூதனம்மா என் பெயர் அனுமான்
ஜெயராம் ஜெயராம் ஜெயராம் ஜெயராம்
ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : எல்லோரும் அனுபவிக்கும் வாயுவின் மகன் நான்
ஸ்ரீராம தூதனம்மா என் பெயர் அனுமான்
என் பெயர் அனுமான்
பெண் : மான் போல் வேஷத்தில் மாரீசன்
அன்று மாமுனி வேஷத்தில் ராவணன்
மான் போல் வேஷத்தில் மாரீசன்
அன்று மாமுனி வேஷத்தில் ராவணன்
பெண் : ராமன் வேஷத்தில் இங்கு வந்தாய்
ஒரு நாள் குரங்காய் மாறி விட்டாய்…..
ராமன் வேஷத்தில் இங்கு வந்தாய்
ஒரு நாள் குரங்காய் மாறி விட்டாய்…..
ஆண் : கணையாழி கொண்டு வந்தேன்
கணையாழி கொண்டு வந்தேன்
கணையாழி கொண்டு வந்தேன்
கணையாழி கொண்டு வந்தேன் மாயமில்லை
உங்கள் கணவன் கொடுத்ததுதான் வாங்கவில்லை
அம்மா கணையாழி கொண்டு வந்தேன் காணவில்லை
காணவில்லை……காணவில்லை…….காணவில்லை….
காணவில்லை……காணவில்லை…….காணவில்லை….
கணையாழி காணவில்லை……