Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
Sumaigal adhigam sonthamum adhigam
Iraivanin kanakkil idhuthaan ulagam
Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
Male : Vaadaa kanna vazhithunai neethaan
Vaazhvenum saalai amaiththavan nee
Vaadaa kanna vazhithunai neethaan
Vaazhvenum saalai amaiththavan nee
Vaasalil nindru poojaigal oliththal
Vazhi viduvaai ena arinthavan naan
Male : Payanam muzhuvathum unnai
Paadi kondirunthaal payamillaiyae
Oli koduththaal vazhi kidaikkum
Male : Thaanae iyangum karuvigal ellaam
Saalaiyil ingae uranguthadaa
Vaanil irunthae iyangukiraai nee
Maanida ulagam nadakkuthadaa
Male : Vithiyin iyakkam
Intha veethigal thorum theriyuthadaa
Oli koduththaal vazhi kidaikkum
Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
Male : Varushaa varusham ovvoru kodi
Makkal koottam peruguthadaa
Vazhigal thorum thalaigalai paarththaal
Pothu koottam pol theriyuthadaa
Padaikkum thozhilai
Konjam niruththi kondaal
Enna paranthaamaa paranthaamaa
Male : Oli koduththaal vazhi kidaikkum
Sumaigal adhigam sonthamum adhigam
Iraivanin kanakkil idhuthaan ulagam
Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தமும் அதிகம்
இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்
ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
ஆண் : வாடா கண்ணா வழித்துணை நீதான்
வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாடா கண்ணா வழித்துணை நீதான்
வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாசலில் நின்று பூஜைகள் ஒலித்தல்
வழி விடுவாய் என அறிந்தவன் நான்
ஆண் : பயணம் முழுவதும் உன்னைப்
பாடிக் கொண்டிருந்தால் பயமில்லையே..
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
ஆண் : தானே இயங்கும் கருவிகள் எல்லாம்
சாலையில் இங்கே உறங்குதடா
வானில் இருந்தே இயக்குகிறாய் நீ
மானிட உலகம் நடக்குதடா
ஆண் : விதியின் இயக்கம்
இந்த வீதிகள் தோறும் தெரியுதடா
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
ஆண் : வருஷா வருஷம் ஒவ்வொரு கோடி
மக்கள் கூட்டம் பெருகுதடா
வழிகள் தோறும் தலைகளைப் பார்த்தால்
பொதுக் கூட்டம் போல் தெரியுதடா
படைக்கும் தொழிலை
கொஞ்சம் நிறுத்திக் கொண்டால்
என்ன பரந்தாமா பரந்தாமா
ஆண் : ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தமும் அதிகம்
இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்
ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்