Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Naan radhaithaan nee kannanthaan
Yaen thaamatham nam manathilum oru manam
Uravilum oru inam
Naan radhaithaan nee kannanthaan
Male : Yaen thaamatham nam manathilum
Oru manam uravilum oru inam
Naan kannanthan….
Laalaalaa laalaalaa aaaaa….aaaaa….
Male : Mai vizhi kannan ingae
Maan kutty radha engae
Mai vizhi kannan ingae
Maan kutty radha engae
Uravaadum kadhal gangai vilaiyaaduthu
Male : Pon thalir maeniyai poongani idhazhgalai
Ennidam thara vendum
Mangala radhaiyin kunguma nadhiyinil
Sangamam pera vendum
Female : Naan enna sonnaen kannaa
Yaen intha kobam kannaa
Naan enna sonnaen kannaa
Yaen intha kobam kannaa
Vaaraai en munnae kannaa uravaada vaa….
Female : Unnidam vanthathu en manam odida
Innoru idam yaedhu
Kannanum radhaiyum saerntha pinnaal
Kadavulum kidaiyaathu
Male : Naan kannan thaan nee radhaithaan
Yaen thaamatham nam manathilum
Oru manam uravilum oru inam
Naan kannanthaan
Male : Kaanaata yaavum kandaen
Kelaatha yaavum kaetten
Saeratha yaavum saernthaen maravendi
Male : Manmatha leelaigal arambam aayina
Manathukku sugamaaga
Maathunai poloru anantham yaedhundu
Uravukku idhamaaga
Female : Sollaathae yaarum kettaal
Pollaatha vaarththai solvaar
Kannaa nee meendum meendum uravaadalaam
Sorkkaththai paarththapin vetkangal yaedhundu
Female : Pakkaththil vaa kannaa….
Sudarvittu erigindra pudhuvagai inbaththai
Niththamum thaa kannaa
Female : Naan radhaithaan nee kannanthaan
Male : Yaen thaamatham nam manathilum
Oru manam uravilum oru inam
Female : Naan radhaithaan nee kannanthaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்
ஏன் தாமதம் நம் மனதிலும் ஒரு மனம்
உறவிலும் ஒரு இனம்
நான் ராதைதான் நீ கண்ணன்தான்
ஆண் : ஏன் தாமதம் நம் மனதிலும்
ஒரு மனம் உறவிலும் ஒரு இனம்
நான் கண்ணன்தான்……
லாலாலா லாலாலா ஆஆஆ ஆஆஆ
ஆண் : மை விழிக் கண்ணன் இங்கே
மான் குட்டி ராதா எங்கே
மை விழிக் கண்ணன் இங்கே
மான் குட்டி ராதா எங்கே
உறவாடும் காதல் கங்கை விளையாடுது
ஆண் : பொன் தளிர் மேனியை பூங்கனி இதழ்களை
என்னிடம் தர வேண்டும்
மங்கல ராதையின் குங்கும நதியினில்
சங்கமம் பெற வேண்டும்
பெண் : நான் என்ன சொன்னேன் கண்ணா
ஏன் இந்த கோபம் கண்ணா
நான் என்ன சொன்னேன் கண்ணா
ஏன் இந்த கோபம் கண்ணா
வாராய் என் முன்னே கண்ணா உறவாட வா…………
பெண் : உன்னிடம் வந்தது என் மனம் ஓடிட
இன்னொரு இடம் ஏது
கண்ணனும் ராதையும் சேர்ந்த பின்னால்
கடவுளும் கிடையாது……..
ஆண் : நான் கண்ணன் தான் நீ ராதைதான்
ஏன் தாமதம் நம் மனதிலும்
ஒரு மனம் உறவிலும் ஒரு இனம்
நான் கண்ணன்தான்……
ஆண் : காணாத யாவும் கண்டேன்
கேளாத யாவும் கேட்டேன்
சேராத யாவும் சேர்ந்தேன் மறவேனடி……….
ஆண் : மன்மத லீலைகள் ஆரம்பம் ஆயின
மனதுக்கு சுகமாக
மாதுனை போலொரு ஆனந்தம் ஏதுண்டு
உறவுக்கு இதமாக
பெண் : சொல்லாதே யாரும் கேட்டால்
பொல்லாத வார்த்தை சொல்வார்
கண்ணா நீ மீண்டும் மீண்டும் உறவாடலாம்
சொர்க்கத்தை பார்த்தபின் வெட்கங்கள் ஏதுண்டு
பெண் : பக்கத்தில் வா கண்ணா…….
சுடர் விட்டு எரிகின்ற புதுவகை இன்பத்தை
நித்தமும் தா கண்ணா
பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்
ஆண் : ஏன் தாமதம் நம் மனதிலும்
ஒரு மனம் உறவிலும் ஒரு இனம்
பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்