Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Thanga mugaththil kungumamittaal mangai
Mangala neram kondu magizhnthaal thangai
Thanga mugaththil kungumamittaal mangai
Mangala neram kondu magizhnthaal thangai
Mullai mottu ingae chinna chittu engae
Varuvaano kannan ingae….
Female : Thanga mugaththil kungumamittaal mangai
Mangala neram kondu magizhnthaal thangai
Mullai mottu ingae chinna chittu engae
Varuvaano kannan ingae….
Female : Aaraththi naan sutri seeraattavaa
Thenpaandi thaai pola thaalaattavaa
Aaraththi naan sutri seeraattavaa
Thenpaandi thaai pola thaalaattavaa
En pillai kolam pon vinnin neelam
Vel murugan vanthaen veettu pillaiyaanaan
Female : Pinju mugaththai chandhiran kandaal odaatho
Manjal niraththu sooriya ganthi vaadaatho
Female : Thanga mugaththil kungumamittaal mangai
Mangala neram kondu magizhnthaal thangai
Mullai mottu ingae chinna chittu engae
Varuvaano kannan ingae….
Female : Vaarungal ellorum edhirpaarkkindrom
Vaasanai poosungal varaverkkindrom
Vaarungal ellorum edhirpaarkkindrom
Vaasanai poosungal varaverkkindrom
En thangai ullam naan thangum illam
En vaazhththukkal ippothu deiva vaakku
Female : Kanni tamizhar illam idhupol vaazhiyavae
Kanavan manavi ondraai vaazhiyavae
Female : Thanga mugaththil kungumamittaal mangai
Mangala neram kondu magizhnthaal thangai
Mullai mottu ingae chinna chittu engae
Varuvaano kannan ingae….
Varuvaano kannan ingae….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை
மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை
தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை
மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை
முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே
வருவானோ கண்ணன் இங்கே….
பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை
மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை
முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே
வருவானோ கண்ணன் இங்கே….
பெண் : ஆரத்தி நான் சுற்றி சீராட்டவா
தென் பாண்டி தாய் போல தாலாட்டவா
ஆரத்தி நான் சுற்றி சீராட்டவா
தென் பாண்டி தாய் போல தாலாட்டவா
என் பிள்ளைக் கோலம் பொன் விண்ணின் நீலம்
வேல் முருகன் வந்தென் வீட்டுப் பிள்ளையானான்
பெண் : பிஞ்சு முகத்தை சந்திரன் கண்டால் ஓடாதோ
மஞ்சள் நிறத்து சூரியகாந்தி வாடாதோ
பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை
மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை
முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே
வருவானோ கண்ணன் இங்கே…
பெண் : வாருங்கள் எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றோம்
வாசனைப் பூசுங்கள் வரவேற்கின்றோம்
வாருங்கள் எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றோம்
வாசனைப் பூசுங்கள் வரவேற்கின்றோம்
என் தங்கை உள்ளம் நான் தங்கும் இல்லம்
என் வாழ்த்துக்கள் இப்போது தெய்வ வாக்கு
பெண் : கன்னித் தமிழர் இல்லம் இதுபோல் வாழியவே
கணவன் மனைவி ஒன்றாய் வாழியவே
பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை
மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை
முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே
வருவானோ கண்ணன் இங்கே…
வருவானோ கண்ணன் இங்கே…