Singer : T. M. Soundrarajan

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Male : Naanum manithan thaanada
En naadi narambinai kelada
Maanam nirainthavan naanada
En maadha deivathin thaayada

Male : Naanum manithan thaanada
En naadi narambinai kelada
Maanam nirainthavan naanada
En maadha deivathin thaayada

Male : Naanum manithan thaanada

Male : Poonai vayatril punugu varum
Nalla poovum saetrinil poothu varum
Seerum kadalinil sangu varum
Seerum kadalinil sangu varum
Oru sippiyin vayittril muthu varum

Male : Vasar padiyum kal thaane
Naam vanangum silaiyum kal thaane
Kallinil baedham illaiyada
Kallinil baedham illaiyada
Adhu kangalil maarum kaatchiyada
Kangalil maarum kaatchiyada

Male : Naanum manithan thaanada

Male : Irakkam migunthavan mel piravi
Adhu illathozhindhavan keel piravi
Pirappin ragasiyam idhuvallavaa
Pirappin ragasiyam idhuvallavaa
Idhu paesum deivathin porul allava

Male : Naanum manithan thaanada
En naadi narambinai kelada
Maanam nirainthavan naanada
En maadha deivathin thaayada

Male : Naanum manithan thaanada

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நானும் மனிதன் தானடா
என் நாடி நரம்பினைக் கேளடா
மானம் நிறைந்தவன் நானடா
என் மாதா தெய்வத்தின் தாயடா

ஆண் : நானும் மனிதன் தானடா
என் நாடி நரம்பினைக் கேளடா
மானம் நிறைந்தவன் நானடா
என் மாதா தெய்வத்தின் தாயடா

ஆண் : நானும் மனிதன் தானடா

ஆண் : பூனை வயிற்றில் புனுகு வரும்
நல்ல பூவும் சேற்றினில் பூத்து வரும்
சீறும் கடலினில் சங்கு வரும்
சீறும் கடலினில் சங்கு வரும்
ஒரு சிப்பியின் வயிற்றில் முத்து வரும்

ஆண் : வாசற் படியும் கல்தானே
நாம் வணங்கும் சிலையும் கல்தானே
கல்லினில் பேதம் இல்லையடா
கல்லினில் பேதம் இல்லையடா
அது கண்களில் மாறும் காட்சியடா
கண்களில் மாறும் காட்சியடா

ஆண் : நானும் மனிதன் தானடா

ஆண் : இரக்கம் மிகுந்தவன் மேல் பிறவி
அது இல்லாதொழிந்தவன் கீழ் பிறவி
பிறப்பின் ரகசியம் இதுவல்லவா
பிறப்பின் ரகசியம் இதுவல்லவா
இது பேசும் தெய்வத்தின் பொருளல்லவா

ஆண் : நானும் மனிதன் தானடா
என் நாடி நரம்பினைக் கேளடா
மானம் நிறைந்தவன் நானடா
என் மாதா தெய்வத்தின் தாயடா

ஆண் : நானும் மனிதன் தானடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here