Singers : M. S. Viswanathan and Kovai Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Uppai thinnavan thanni kudippaan
Thappai seithavan thandanai kolvaan
Oppu kondavan vetkkapaduvaan
Vetkkappattavan nyaanam peruvaan

Male : Uppai thinnavan thanni kudippaan
Thappai seithavan thandanai kolvaan
Oppu kondavan vetkkapaduvaan
Vetkkappattavan nyaanam peruvaan

Male : Oo nanbargal suttapin
Nerupai thottavnillai
Pattapin meendum kettu povathillai
Vizhuntha kuzhanthai ezhunthu nadakkum
Thelintha manithan thinthi nadappaan

Male : Karuvarai thodangi kallarai varaiyil
Ovvoru manithanum kaithi
Idhu gouthama budharum padhinettu siththarum
Ulagukku solliya sedhi

Male : Panthamum paasamum kai kaal vilangaai
Pootti kondavan manithan
Idhil sinthanai seithu nyaanam vanthaal
Unmaiyil avanthaan punidhan

Male : Uppai thinnavan thanni kudippaan
Thappai seithavan thandanai kolvaan
Oppu kondavan vetkkapaduvaan
Vetkkappattavan nyaanam peruvaan

Male : Arisiyin melae avanavan peyarai
Aandavan ezhuthi vaippaan
Adhai aduththavar yaarum keduppatharkkillai
Avanavan thindru theerppaan

Male : Evanevanukku enenna thevai
Iraivan kodukkindraan
Adhai avasara manithan aaththirapattu
Adharkkul edukkindraan

Male : Uppai thinnavan thanni kudippaan
Thappai seithavan thandanai kolvaan
Oppu kondavan vetkkapaduvaan
Vetkkappattavan nyaanam peruvaan
Nyaanam peruaan nyaanam peruvaan

Male : Kadavul namathu pakkam irupaan
Neengal kanneer vida vendaam
Kadavul namathu pakkam irupaan
Neengal kanneer vida vendaam
Kaalam vanthaal kadhavugal thirakkum
Kavalai padavendaam

Male : Pettaiyidum muttaikku paarayilae thaeraikkum
Sattapadi avanthaanae kaaval
Avan petreduththa pillaigalil kuttramulla pergalai
Thakkapadi aadharikkum devan
Avan thakkapadi aadharikkumdevan

Male : Thumparuntha kandrugalum thullugindra maadugalum
Maalai vanthaal veedu vanthu serum
Nalla panbu ketta maanidanum pakkuvamaai maarugindra
Velai vanthaal vaazhvu vanthu koodum

Male : Kadavul namathu pakkam irupaan
Neengal kanneer vida vendaam
Kaalam vanthaal kadhavugal thirakkum
Kavalai padavendaam

Male : ………………..
Whistle : ……………..

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன்

மற்றும் கோவை சுந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உப்பைத் தின்னவன் தண்ணிக் குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனைக் கொள்வான்
ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான்
வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்

ஆண் : உப்பைத் தின்னவன் தண்ணிக் குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனைக் கொள்வான்
ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான்
வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்

ஆண் : ஓ நண்பர்களே சுட்டப் பின்
நெருப்பை தொட்டவனில்லை
பட்டப்பின் மீண்டும் கெட்டுப் போவதில்லை
விழுந்த குழந்தை எழுந்து நடக்கும்
தெளிந்த மனிதன் திருந்தி நடப்பான்

ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரையில்
ஒவ்வொரு மனிதனும் கைதி
இது கௌதம புத்தரும் பதினெட்டு சித்தரும்
உலகுக்கு சொல்லிய சேதி

ஆண் : பந்தமும் பாசமும் கை கால் விலங்காய்
பூட்டிக் கொண்டவன் மனிதன்
இதில் சிந்தனை செய்து ஞானம் வந்தால்
உண்மையில் அவன்தான் புனிதன்

ஆண் : உப்பைத் தின்னவன் தண்ணிக் குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனைக் கொள்வான்
ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான்
வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்

ஆண் : அரிசியின் மேலே அவனவன் பெயரை
ஆண்டவன் எழுதி வைப்பான்
அதை அடுத்தவர் யாரும் கெடுப்பதற்கில்லை
அவனவன் தின்று தீர்ப்பான்

ஆண் : அரிசியின் மேலே அவனவன் பெயரை
ஆண்டவன் எழுதி வைப்பான்
அதை அடுத்தவர் யாரும் கெடுப்பதற்கில்லை
அவனவன் தின்று தீர்ப்பான்

ஆண் : எவனெவனுக்கு என்னென்ன தேவை
இறைவன் கொடுக்கின்றான்
அதை அவசர மனிதன் ஆத்திரப்பட்டு
அதற்குள் எடுக்கின்றான்

ஆண் : உப்பைத் தின்னவன் தண்ணிக் குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனைக் கொள்வான்
ஒப்புக் கொண்டவன் வெட்கப்படுவான்
வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்
ஞானம் பெறுவான் ஞானம் பெறுவான்

ஆண் : கடவுள் நமது பக்கம் இருப்பான்
நீங்கள் கண்ணீர் விட வேண்டாம்
கடவுள் நமது பக்கம் இருப்பான்
நீங்கள் கண்ணீர் விட வேண்டாம்
காலம் வந்தால் கதவுகள் திறக்கும்
கவலைப் படவேண்டாம்

ஆண் : பெட்டையிடும் முட்டைக்கும் பாறையிலே
தேரைக்கும்
சட்டப்படி அவன்தானே காவல்
அவன் பெற்றெடுத்த பிள்ளைகளில் குற்றமுள்ள பேர்களை
தக்கப்படி ஆதரிக்கும் தேவன்
அவன் தக்கப்படி ஆதரிக்கும் தேவன்

ஆண் : தும்பறுந்த கன்றுகளும் துள்ளுகின்ற மாடுகளும்
மாலை வந்தால் வீடு வந்து சேரும்
நல்ல பண்பு கெட்ட மானிடனும் பக்குவமாய் மாறுகின்ற
வேளை வந்தால் வாழ்வு வந்து கூடும்
நல்ல வேளை வந்தால் வாழ்வு வந்து கூடும்

ஆண் : கடவுள் நமது பக்கம் இருப்பான்
நீங்கள் கண்ணீர் விட வேண்டாம்
காலம் வந்தால் கதவுகள் திறக்கும்
கவலைப் படவேண்டாம்…..

ஆண் : ………………………
விசில் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here