Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Moondru tamil thondriyathum unnidamo
Moondru tamil thondriyathum unnidamo
Nee moovendhar vazhi vantha mannavano
Nee moovendhar vazhi vantha mannavano
Male : Naangu gunam saernthathum orr pennidamo
Adhu nadai pazhagi vanthathenna ennidamo
Naangu gunam saernthathum orr pennidamo
Adhu nadai pazhagi vanthathenna ennidamo
Adhu nadai pazhagi vanthathenna ennidamo ennidamo
Male : Naangu gunam saernthathum orr pennidamo
Male : Uthithathu paar sengathithaan keezh dhisaiyil
Adhan olivellaam paainththu paar vaanveliyil
Uthithathu paar sengathithaan keezh dhisaiyil
Adhan olivellaam paainththu paar vaanveliyil
Female : Kadhir polae naan kandaen mannan mugam
Adhan oliyaalae malarum
Naan sengamalam sengamalam
Male : Moondru tamil thondriyathum unnidamo
Female : Nee moovendhar vazhi vantha
Mannavano mannavano….
Female : Pani mazhaiyil nanainthathenna malar vizhigal
Unnai paarkkaiyilae pesidumo kilimozhigal
Pani mazhaiyil nanainthathenna malar vizhigal
Unnai paarkkaiyilae pesidumo kilimozhigal
Male : Iru kanigal kaaithathenna oru kodiyil
Adhu virunthenavae thavazhnthathenna en madiyil
Adhu virunthenavae thavazhnthathenna en madiyil en madiyil
Female : Moondru tamil thondriyathum unnidamo
Male : Ila nagaithaan nee ezhuthum sirukathaiyo
Adhan idai thondrum naanamthaan munnuraiyo
Ila nagaithaan nee ezhuthum sirukathaiyo
Adhan idai thondrum naanamthaan munnuraiyo
Female : Idam thanthaal nadappathellaam thodarkathaiyo
Antha ilakkiyaththil vidinthaalthaan mudivuraiyo
Male : Naangu gunam saernthathum orr pennidamo
Adhu nadai pazhagi vanthathenna ennidamo
Adhu nadai pazhagi vanthathenna ennidamo ennidamo
Female : Moondru tamil thondriyathum unnidamo
Nee moovendhar vazhi vantha mannavano
Nee moovendhar vazhi vantha mannavano….mannavano….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ..
ஆண் : நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ
ஆண் : நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ…….
ஆண் : உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில்
அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில்
அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
பெண் : கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம்
அதன் ஒளியாலே மலரும்
நான்செங்கமலம் செங்கமலம்..
ஆண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
பெண் : நீ மூவேந்தர் வழி வந்த
மன்னவனோ மன்னவனோ…….
பெண் : பனி மழையில் நனைந்ததென்ன மலர் விழிகள்
உன்னைப் பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
பனி மழையில் நனைந்ததென்ன மலர் விழிகள்
உன்னைப் பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
ஆண் : இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில்
அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் அது
விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் என் மடியில்..
பெண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ…..
ஆண் : இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ
அதன் இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ
அதன் இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
பெண் : இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ
அந்த இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ….
ஆண் : நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ……
பெண் : மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ……மன்னவனோ……