Singers : L. R. Eswari and T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female : Naan oru thani ragam
Neeyoru pudhu mugam
Naan oru thani ragam
Neeyoru pudhu mugam
Nadukkam edharkku nerukkam varattum
Ennodu nee konjalaam

Female : Naan oru thani ragam
Neeyoru pudhu mugam

Female : Kangal pattaalum kaigal thodaatha
Mullai mottaaga naan illaiyaa
Thevai sonnaalum thaanae vanthaalum
Aanmai illaatha aambalaiyaa
Neeyoru aambalaiyaa

Male : Sangali karupanum madurai veeranum
Sangali karupanum madurai veeranum
Enakku sonthamadi
Singatha paarththaa
Intha singatha parththa ambuttu perum
Kumbittu vizhuvaandi kaalil
Kumbittu vizhuvaandi

Male : Sivangangai seemaiyilae
Chinnamaruthu kooththilae
Sivangangai seemaiyilae
Chinnamaruthu kooththilae
Sippaai velai senjendi
Thuppaakkiyaal suttavandi adi

Male : Kattazhagu chittu patta pagal neraththil
thottizhuththu kattililae podavaa unnai
Thottilukku sonthakkaari aakkavaa
Sambo sambo sambo kalakkuthaan
Orae kalakkuthaan

Female : Kannaiyyaa panjaanga
Kottai konjam maaththu
Ada mookkaiyaa
Uchi kudumi thannai vettu
Nadai udai maari naagareegam maari
Nadai udai maari naagareegam maari
Paavai ennai thottu thottu
Paada vendum paattu pattu paattu

Male : Kodanaattu saelaikatti
Kondaiyilae poo mudichchi
Therkaththi pombalaiyaa nadakkanum
Unakku themmaangu
Paattu paada theriyanum
Unakku themmaangu
Paattu paada theriyanum

Female : Aada theriyanum sasasasasachchaa
Paada theriyanum lalalallaa

Female : ………………

Male : Adadadadadaa….

Male : Mayilaattam oyilaattam
Mannarkudi karakaattam
Sathiraattam kuyilaattam
Silampaattam kavadiyaattam
Ha hae ha hae

Male : Pudhukottai puraviyaattam
Aadikaatta theriyumaa
Antha arumaiyellaam
Unakku puriyumaa

Male : Naan oru thani ragam
Female : Ohho…naan ini un vasam
Ilamai kaninthu madiyil vizhunthaal
Inbangal nooraayiram
Ingu inbangal nooraayiram

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி

மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : நான் ஒரு தனி ரகம்
நீயொரு புது முகம்
நான் ஒரு தனி ரகம்
நீயொரு புது முகம்
நடுக்கம் எதற்கு நெருக்கம் வரட்டும்
என்னோடு நீ கொஞ்சலாம்……

பெண் : நான் ஒரு தனி ரகம்
நீயொரு புது முகம்

பெண் : கண்கள் பட்டாலும் கைகள் தொடாத
முல்லை மொட்டாக நான் இல்லையா
தேவை சொன்னாலும் தானே வந்தாலும்
ஆண்மை இல்லாத ஆம்பளையா…..
நீயொரு ஆம்பளையா….

ஆண் : சங்கலி கருப்பனும் மதுரை வீரனும்
சங்கலி கருப்பனும் மதுரை வீரனும்
எனக்கு சொந்தமடி
சிங்கத்த பார்த்தா
இந்த சிங்கத்த பார்த்தா அம்புட்டு பெரும்
கும்பிட்டு விழுவான்டி காலில்
கும்பிட்டு விழுவான்டி……

ஆண் : சிவகங்கை சீமையிலே
சின்னமருது கூட்டத்திலே
சிவகங்கை சீமையிலே
சின்னமருது கூட்டத்திலே
சிப்பாய் வேளை செஞ்சேன்டி
துப்பாக்கியால் சுட்டவன்டி அடி

ஆண் : கட்டழகு சிட்டு பட்ட பகல் நேரத்திலே
தொட்டிழுத்து கட்டிலிலே போடவா உன்னை
தொட்டிலுக்கு சொந்தக்காரி ஆக்கவா
சம்போ சம்போ சம்போ கலக்குதான்
ஒரே கலக்குதான்…

பெண் : கண்ணய்யா பஞ்சாங்க
கோட்டை கொஞ்சம் மாத்து
அட மூக்கையா
உச்சி குடுமி தன்னை வெட்டு
நடை உடை மாறி நாகரீகம் மாறி
நடை உடை மாறி நாகரீகம் மாறி
பாவை என்னைத் தொட்டு தொட்டு
பாடவேண்டும் பாட்டு…பாட்டு…….பாட்டு…….

ஆண் : கொடநாட்டு சேலைக்கட்டி
கொண்டையிலே பூ முடிச்சி
தெற்கத்தி பொம்பளையா நடக்கணும்
உனக்கு தெம்மாங்கு
பாட்டு பாட தெரியணும்
உனக்கு தெம்மாங்கு
பாட்டு பாட தெரியணும்

பெண் : ஆட தெரியணும் சசசசசச்சா
பாட தெரியணும் லலலல்லா

பெண் : …………………………

ஆண் : அடடடடடா

ஆண் : மயிலாட்டம் ஒயிலாட்டம்
மன்னார்குடி கரகாட்டம்
சதிராட்டம் குயிலாட்டம்
சிலம்பாட்டம் காவடியாட்டம்
ஹ ஹே ஹ ஹே

ஆண் : புதுக்கோட்டை புரவியாட்டம்
ஆடிக்காட்ட தெரியுமா
அந்த அருமையெல்லாம்
உனக்கு புரியுமா…..

ஆண் : நான் ஒரு தனி ரகம்
பெண் : ஓஹோ……நான் இனி உன் வசம்
இளமை கனிந்து மடியில் விழுந்தால்
இன்பங்கள் நூறாயிரம்
இங்கு இன்பங்கள் நூறாயிரம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here