Singers : S. Janaki, L. R. Eswari and T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Male : Ungalil naanoruvan
Udhavum manamulla nanban
Ungalil naanoruvan
Udhavum manamulla nanban

Male : Kalangam illaamal
Kavalai kollaamal
Kalanthu uravaadum ilaingan
Kalanthu uravaadum ilaingan

Female : Aa….aa…aa….Kalangam illaamal
Kavalai kollaamal
Kalanthu uravaadum ilaingan
Kalanthu uravaadum ilaingan

Male : Engiruntho ingu vanthen
Edhuvum illai ennai thanthaen
Ellorukkum nallavanaaga
Ungal ullam kavar kalvan endraaga

Male : Aahaa ungalil naanoruvan
Udhavum manamulla nanban

Male : …………………..

Female : …………………..

Female : Solli kondu varuvathillai
Poongaattrum vaan mazhaiyum
Nalla nenjam adhu polae
Sollaamal nalam puriyum

Female : Ullamulla manaitharukku
Ullamthaan parisaagum
Nandri solli kodupatharkku
Vereathu eedaagum

Females : Unthan sevaikalellaam
Engal sinthaiyai allum
Unthan sevaikalellaam
Engal sinthaiyai allum

Male : Ungalil naanoruvan
Udhavum manamulla nanban

Male : Kalangam illaamal
Kavalai kollaamal
Kalanthu uravaadum ilaingan
Male and Female :
Kalanthu uravaadum ilaingan

Male : …………………..

Female : …………………..

Male : Aa…aa….aa….aa….
Female : Aa….aa….aa….aa…

Male : Aaha ungalil naanoruvan
Udhavum manamulla nanban

Male : Kodigalum sedigalum aadavum paadavum
Maraththukkum aasai varum
Sirusugal ilasugal aadavum paadavum
Kizhaththukkum aasai varum

Male : Kodigalum sedigalum aadavum paadavum
Maraththukkum aasai varum
Sirusugal ilasugal aadavum paadavum
Kizhaththukkum aasai varum

Male : Naanoru kaalaththil aadiya aattangal
Ninaivukku varugirathu
Mudhumaiyil iruppavan ninaivugal marupadi
Ilamaikku varugirathu

Male : Periyaarkku irukkum pozhivum valivum
Siriyaarkku illaiyada
Mudhumai enbathu udalukkuththaanae
Arivukku illaiyadaa hahahahahahaah

Male : ……………..

Male : Pozhuthu vidinthathu angae bhoomi siriththathu ingae
Pozhuthu vidinthathu angae bhoomi siriththathu ingae
Sooriyan varavaalae udhaya sooriyan varavaalae
Intha mannulakengum ponniramaanathu
Sennira kathiraalae

Male : En paattil iruppathu sollaatchi
Indru naattil nadappathu nallaatchi
Intha naadum veedum nalamura vaazha
Vendum namakku suya aatchi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் எஸ். ஜானகி

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : உங்களில் நானொருவன்
உதவும் மனமுள்ள நண்பன்
உங்களில் நானொருவன்
உதவும் மனமுள்ள நண்பன்

ஆண் : களங்கம் இல்லாமல்
கவலை கொள்ளாமல்
கலந்து உறவாடும் இளைஞன்
கலந்து உறவாடும் இளைஞன்

பெண் : ஆ…..ஆ….ஆ களங்கம் இல்லாமல்
கவலை கொள்ளாமல்
கலந்து உறவாடும் இளைஞன்
கலந்து உறவாடும் இளைஞன்

ஆண் : எங்கிருந்தோ இங்கு வந்தேன்
எதுவும் இல்லை என்னை தந்தேன்
எல்லோருக்கும் நல்லவனாக
உங்கள் உள்ளம்கவர் கள்வன் என்றாக

ஆண் : ஆஹா உங்களில் நானொருவன்
உதவும் மனமுள்ள நண்பன்

ஆண் : …………………………..

பெண் : ………………………………..

பெண் : சொல்லிக் கொண்டு வருவதில்லை
பூங்காற்றும் வான் மழையும்
நல்ல நெஞ்சம் அது போலே
சொல்லாமல் நலம் புரியும்

பெண் : உள்ளமுள்ள மனிதருக்கு
உள்ளம்தான் பரிசாகும்
நன்றி சொல்லிக் கொடுப்பதற்கு
வேறேது ஈடாகும்

பெண்கள் : உந்தன் சேவைகளெல்லாம்
எங்கள் சிந்தையை அள்ளும்..
உந்தன் சேவைகளெல்லாம்
எங்கள் சிந்தையை அள்ளும்……

ஆண் : உங்களில் நானொருவன்
உதவும் மனமுள்ள நண்பன்

ஆண் : களங்கம் இல்லாமல்
கவலை கொள்ளாமல்
கலந்து உறவாடும் இளைஞன்
ஆண் மற்றும் பெண் :
கலந்து உறவாடும் இளைஞன்

ஆண் : …………………………..

பெண் : ………………………………..

ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ……
பெண் : ஆ…..ஆ…..ஆ……ஆ……

ஆண் : ஆஹா உங்களில் நானொருவன்
உதவும் மனமுள்ள நண்பன்

ஆண் : கொடிகளும் செடிகளும் ஆடவும் பாடவும்
மரத்துக்கும் ஆசை வரும்
சிறுசுகள் இளசுகள் ஆடவும் பாடவும்
கிழத்துக்கும் ஆசை வரும்

ஆண் : கொடிகளும் செடிகளும் ஆடவும் பாடவும்
மரத்துக்கும் ஆசை வரும்
சிறுசுகள் இளசுகள் ஆடவும் பாடவும்
கிழத்துக்கும் ஆசை வரும்

ஆண் : நானொரு காலத்தில் ஆடிய ஆட்டங்கள்
நினைவுக்கு வருகிறது
முதுமையில் இருப்பவன் நினைவுகள் மறுபடி
இளமைக்கு வருகிறது

ஆண் : பெரியார்க்கு இருக்கும் பொலிவும் வலிவும்
சிறியார்க்கு இல்லையடா
முதுமை என்பது உடலுக்குத்தானே
அறிவுக்கு இல்லையடா ஹஹஹஹாஹ்

ஆண் : …………………………

ஆண் : பொழுது விடிந்தது அங்கே பூமி சிரித்தது இங்கே
பொழுது விடிந்தது அங்கே பூமி சிரித்தது இங்கே
சூரியன் வரவாலே உதய சூரியன் வரவாலே
இந்த மண்ணுலகெங்கும் பொன்னிறமானது
செந்நிறக் கதிராலே..

ஆண் : என் பாட்டில் இருப்பது சொல்லாட்சி
இன்று நாட்டில் நடப்பது நல்லாட்சி
இந்த நாடும் வீடும் நலமுற வாழ
வேண்டும் நமக்கு சுய ஆட்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here