Singer : T. M. Soundarajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Humming : ……….

Male : Dharmamenbaar needhi enbaar tharamenbaar
Sarithirathu saandru solvaar
Thaai anbu pettagathai santhiyilae erindhuvittu
Thanmaana veerarenbaar

Male : Marmamaai sathipurivaar vaaipesaa abalaigalin
Vaazhvukku nanjuvaippar
Karmavinai enbaar bhramman eluthenbaaar
Kadavul mel kuttram enbaar ..haaa..aaa..aa

Male : Haee haeii

Male : Indha thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Chorus : Naam onnayirukkanum annachi

Male : Ennalum ulagil yemaatram vizhigal
Illadha nannaalai undaakkanum
Ennalum ulagil yemaatram vizhigal
Illadha nannaalai undaakkanum

Chorus : Indha thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Naam onnayirukkanum annachi

Humming : ……………….

Male : Podhunalam pesum punniyavangalin
Pokkinil anaega vithiyaasam..hoo oo hoo ooo
Chorus : Ho ho oo oo oo
Male : Podhunalam pesum punniyavangalin
Pokkinil anaega vithiyaasam
Pudhu pudhu vagaiyil pulambhuvadhellam
Puviyai mayakkum velivesham

Male : Andha polladha manidhar sollamal thiruntha
Nallorai elllorum kondaadanum

Chorus : Indha thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Naam onnayirukkanum annachi

Humming : ……………….

Male : Kadavul iruppadhum illa inbadhum
Kavaikku udhavaadha verum pechu
Chorus : Ho ho oo oo oo
Male : Kadavul iruppadhum illa inbadhum
Kavaikku udhavaadha verum pechu
Kanji killathaar kavalai neengave
Karudha vendiyadhai marandhaachu

Male : Pazhang kadhaigalai pesi kaalam veenaachu
Kaiyaale munnaetram kandaaganum

Chorus : Indha thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Naam onnayirukkanum annachi

Humming : ……………….

Male : Naadi thalandhavanga aadi nadappavanga
Nallavanga kettavanga namba mudiyadhavanga
Chorus : Nallavanga kettavanga namba mudiyadhavanga
Male : Paadi kanathavanga thaadi valarthavanga
Palapala velaigalil pangeduthu kondavanga
Chorus : Palapala velaigalil pangeduthu kondavanga

Male : Padippavanga veedu pudippavanga
Podi pasanga perumpokkiringa

Male : Padippavanga veedu pudippavanga
Podi pasanga perumpokkiringa

Male : Inum pombalainga aambalainga
Athanai peraiyum vechu maada ilukkurom vegama
Namma vaazhkkai kedukkuthu roatoramaa
Chorus : Vandiyai urutti varumaiyai veratti
Undaalum kaaindhaalum ondraaganum
Namma vandiyai urutti varumaiyai veratti
Undaalum kaaindhaalum ondraaganum

Chorus : Indha thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Naam onnayirukkanum annachi
Ennalum ulagil yemaatram vizhigal
Illadha nannaalai undaakkanum

Chorus : Indha thinnai pechu veraridam
Oru kannayirukkanum annachi
Naam onnayirukkanum annachi

Humming : .………………

Humming : ……………….

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

முனங்கல் : ……………..

ஆண் : தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுச்
தன்மான வீரரென்பார்

ஆண் : மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார் ..ஹா..ஹா…ஆஅ

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : இந்தத்திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
இந்தத்திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
குழு : நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

ஆண் : எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

குழு : இந்தத்திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

முனங்கல் : …………………

ஆண் : பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம் ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம்

ஆண் : அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்

குழு : இந்தத்திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

முனங்கல் : …………………

ஆண் : கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
குழு : ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு

ஆண் : பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

குழு : இந்தத்திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

முனங்கல் : …………………

ஆண் : நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
குழு : நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
ஆண் : பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
குழு : பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க

ஆண் : படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க இன்னும்

ஆண் : படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க இன்னும்

ஆண் : பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும் வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
குழு : வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்
நம்ம வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்

குழு : இந்தத்திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

முனங்கல் : …………………

முனங்கல் : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here