Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Engiruntho vantha paravaigalae
Eththanaiyo inba kanavugalae

Female : Engiruntho vantha paravaigalae
Eththanaiyo inba kanavugalae
Sonthamillaatha uravugalae
Thodarattum namathu ninaivugalae
Sonthamillaatha uravugalae
Thodarattum namathu ninaivugalae

Female : Engiruntho vantha paravaigalae
Eththanaiyo inba kanavugalae

Female : Vaalipamae mangalamae naalai evvidamo
Vaazhkkai ennum sannithiyil yaarum yaarudano
Vaalipamae mangalamae naalai evvidamo
Vaazhkkai ennum sannithiyil yaarum yaarudano

Female : Anbinil yaavarum saernthirupom
Aadiyum paadiyum vaazhnthirupom
Aayiram ennangal valarththirunthom
Aayinum pirinthae odugindrom
Aayinum pirinthae odugindrom

Female : Engiruntho vantha paravaigalae
Eththanaiyo inba kanavugalae

Female : Bedhaigalaai nyaanamindri ingu vanthenna
Medhaigalaai nyaanigalaai indru sovathenna
Naalaiya ulagam nam vasamae
Nallathum theeyathum nammidamae
Yaezhigalum ini selvargalae
Yaeruvathellaam irakkamillai

Female : Engiruntho vantha paravaigalae
Eththanaiyo inba kanavugalae

Female : Aasaiyilo kadhalilo nooril ondrirandu
Annan ena thangai ena naamum vaazhnthathundu
Kambanai pol oru annan undu
Kavithaiyil solvaar mannar endru
Ennugiraen avan mugaththai indru
Yaengugiren avan pirivu kandu

Female : Engiruntho vantha paravaigalae
Eththanaiyo inba kanavugalae

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே
எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே
எத்தனையோ இன்பக் கனவுகளே
சொந்தமில்லாத உறவுகளே
தொடரட்டும் நமது நினைவுகளே
சொந்தமில்லாத உறவுகளே
தொடரட்டும் நமது நினைவுகளே

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே
எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : வாலிபமே மங்கலமே நாளை எவ்விடமோ
வாழ்க்கை என்னும் சந்நிதியில் யாரும் யாருடனோ
வாலிபமே மங்கலமே நாளை எவ்விடமோ
வாழ்க்கை என்னும் சந்நிதியில் யாரும் யாருடனோ

பெண் : அன்பினில் யாவரும் சேர்ந்திருந்தோம்
ஆடியும் பாடியும் வாழ்ந்திருந்தோம்
ஆயிரம் எண்ணங்கள் வளர்த்திருந்தோம்
ஆயினும் பிரிந்தே ஓடுகின்றோம்
ஆயினும் பிரிந்தே ஓடுகின்றோம்

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே
எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : பேதைகளாய் ஞானமின்றி இங்கு வந்தென்ன
மேதைகளாய் ஞானிகளாய் இன்று செல்வதென்ன
நாளைய உலகம் நம் வசமே
நல்லதும் தீயதும் நம்மிடமே
ஏழைகளும் இனி செல்வர்களே
ஏறுவதெல்லாம் இறக்கமில்லை

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே
எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : ஆசையிலோ காதலிலோ நூறில் ஒன்றிரண்டு
அண்ணன் என தங்கை என நாமும் வாழ்ந்ததுண்டு
கம்பனைப் போல் ஒரு அண்ணன் உண்டு
கவிதையில் சொல்வார் மன்னர் என்று
எண்ணுகிறேன் அவன் முகத்தை இன்று
ஏங்குகிறேன் அவன் பிரிவு கண்டு

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே
எத்தனையோ இன்பக் கனவுகளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here