Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kosalaiyin thirukumaraa konju mani rama
Kooviyathu sevalathan kolamozhi kelaai
Poosi varum sengathiron pooththu varum neram
Bhoopaalam paadugindrom ponmaalae vaaraai

Male : Paasamozhi Devargal tham pagarkadamai seiyya
Paramporulae kanmalaraai palli ezhuntharulaai
Senthiruvaen thirumagalae sengamala thayae
Thirumaalin maarpagaththil thigazhpavalum neeyae

Male : Thaemalarae karunaimozhi thirumalaiyon thunaiyae
Thiruth devi unakindrdu narkalaiyaaga
Aasaiyudan vendugirom adiyavargal ondraai
Aanantha thirumaalae thuyil ezhuvaai annalae….

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கோசலையின் திருக்குமரா கொஞ்சு மணி ராமா
கூவியது சேவலதன் கோலமொழி கேளாய்
பூசி வரும் செங்கதிரோன் பூத்து வரும் நேரம்
பூபாளம் பாடுகின்றோம் போன்மாலே வாராய்

ஆண் : பாசமொழி தேவர்கள் தம் பகற்கடமை செய்ய
பரம்பொருளே கண்மலராய் பள்ளி எழுந்தருளாய்
செந்திருவே திருமகளே செங்கமலத் தாயே
திருமாலின் மார்பகத்தில் திகழ்பவளும் நீயே

ஆண் : தேமலரே கருணைமொழி திருமலையோன் துணையே
திருத்தேவி உனக்கின்று நற்காலையாக
ஆசையுடன் வேண்டுகிறோம் அடியவர்கள் ஒன்றாய்
ஆனந்தத் திருமாலே துயிலெழுவாய் அண்ணலே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here