Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Aalangudi Somu

Female : Ponnoonjal katti vaiththu
Poovai ennai aatti vaiththu
Ponnoonjal katti vaiththu
Poovai ennai aatti vaiththu
Paarththirukkum mannavarae ennavarae
Bakthiyil ennulagam ponnulagam
Unthan bakthiyil ennulagam ponnulagam

Female : Ponnoonjal katti vaiththu
Poovai ennai aatti vaiththu

Female : Nenjilae aasai vanthaal nimmathikku theemaiyundu
Nenjilae aasai vanthaal nimmathikku theemaiyundu
Neengaatha anporu naal neerkkumizhi aavathundu
Neengaatha anporu naal neerkkumizhi aavathundu
Neengaatha anporu naal neerkkumizhi aavathundu
Vanjiyarin vaazhkkaiyilae vanangum dheivamondru
Antha vasalil ullavarai vattraatha inbamundu

Female : Ponnoonjal katti vaiththu
Poovai ennai aatti vaiththu
Paarththirukkum mannavarae ennavarae
Bakthiyil ennulagam ponnulagam
Unthan bakthiyil ennulagam ponnulagam

Female : Kannilae unaiyeduththu
Kaanaatha sugam padaithaen
Penninam perumai pera
Bakthiyin uruveduththaen
Penninam perumai pera
Bakthiyin uruveduththaen

Female : Vinnilae nilaverinthaal
Veedhiyil oli sirikkum
Unnilae naanirunthaa
Ulagae enai mathikkum

Female : Ponnoonjal katti vaiththu
Poovai ennai aatti vaiththu
Paarththirukkum mannavarae ennavarae
Bakthiyil ennulagam ponnulagam
Unthan bakthiyil ennulagam ponnulagam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து
பூவை என்னை ஆட்டி வைத்து
பொன்னூஞ்சல் கட்டி வைத்து
பூவை என்னை ஆட்டி வைத்து
பார்த்திருக்கும் மன்னவரே என்னவரே
பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்
உந்தன் பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்…..

பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து
பூவை என்னை ஆட்டி வைத்து

பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால் நிம்மதிக்கு தீமையுண்டு
நெஞ்சிலே ஆசை வந்தால் நிம்மதிக்கு தீமையுண்டு
நீங்காத அன்பொரு நாள் நீர்க்குமிழி ஆவதுண்டு
நீங்காத அன்பொரு நாள் நீர்க்குமிழி ஆவதுண்டு
வஞ்சியரின் வாழ்க்கையிலே வணங்கும் தெய்வமொன்று
அந்த வாசலில் உள்ளவரை வற்றாத இன்பமுண்டு

பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து
பூவை என்னை ஆட்டி வைத்து
பார்த்திருக்கும் மன்னவரே என்னவரே
பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்
உந்தன் பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்…..

பெண் : கண்ணிலே உனையெடுத்து
காணாத சுகம் படைத்தேன்
பெண்ணினம் பெருமை பெற
பக்தியின் உருவெடுத்தேன்
பெண்ணினம் பெருமை பெற
பக்தியின் உருவெடுத்தேன்

பெண் : விண்ணிலே நிலவெறிந்தால்
வீதியில் ஒளி சிரிக்கும்
உன்னிலே நானிருந்தா
உலகே எனை மதிக்கும்

பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து
பூவை என்னை ஆட்டி வைத்து
பார்த்திருக்கும் மன்னவரே என்னவரே
பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்
உந்தன் பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here