Singer : P. Susheela and L. R. Eshwari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Aalangudi Somu

Female : Kannanukku paer sootti
Kaanbavargal paaraatti
Kondaadum inbamallavo
Intha katti magan aadi vara
Thottilondru pottu vaiththu
Paadugindra velaiyallavo…
Paadugindra velaiyallavo…

Female : Kannanukku paer sootti
Kaanbavargal paaraatti
Kondaadum inbamallavo

Female : Muththu pavazham kondu
Mella sirippaano
Thaththi thaththi nadanthu
Chellam konjuvaano

Female : Muththu pavazham kondu
Mella sirippaano
Thaththi thaththi nadanthu
Chellam konjuvaano

Female : Mukkani thaen suvai
Sollil vadippaano
Annai sol kettiduvaano
Kannan anantha paal kudippaano….

Female : Kannanukku paer sootti
Kaanbavargal paaraatti
Kondaadum inbamallavo

Female : Ooraargal vaazhththi unnai
Paaraattum velaiyilae
Paer sootta mudiyaamal
Pettra manam yaenguthadaa

Female : Neeraadum imaiyoram
Poraattam nadakkuthadaa
Seeraatta paalootta thaaipaasam pirakkuthadaa
Maganae……maganae….nee vaazhga….

Female : Kannanukku paer sootti
Kaanbavargal paaraatti
Kondaadum inbamallavo
Intha katti magan aadi vara
Thottilondru pottu vaiththu
Paadugindra velaiyallavo…
Paadugindra velaiyallavo…

Female : Thanga pathakkam ondru
Vaangi koduppaano
Thaayennum pettakaththil
Anbai niraippaano
Thalaivargal varisaiyil idam pidippaano
Tharanikku pugazh tharuvaano
Kannan geedhaiyin vazhi nadappaano…

Female : Geedhaiyil kannan sonnaan
Kadamaithaan vaazhkkaiyendru
Vedhaththilum viyaasan sonnaan
Vaazhkkai kadamaikkendru

Female : Geedhai vazhi naan nadanthu
Kudumba nalamthanai ninainththu
Paathiyilae unai piriyum
Payanam vanthu saernthathadaa
Maganae….maganae….nee vaazhga

Females : Kannanukku paer sootti
Kaanbavargal paaraatti
Kondaadum inbamallavo
Intha katti magan aadi vara
Thottilondru pottu vaiththu
Paadugindra velaiyallavo…
Paadugindra velaiyallavo…

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி
காண்பவர்கள் பாராட்டி
கொண்டாடும் இன்பமல்லவோ
இந்த கட்டி மகன் ஆடி வர
தொட்டிலொன்று போட்டு வைத்து
பாடுகின்ற வேளையல்லவோ….
பாடுகின்ற வேளையல்லவோ….

பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி
காண்பவர்கள் பாராட்டி
கொண்டாடும் இன்பமல்லவோ

பெண் : முத்து பவழம் கொண்டு
மெல்லச் சிரிப்பானோ
தத்தி தத்தி நடந்து
செல்லம் கொஞ்சுவானோ

பெண் : முத்து பவழம் கொண்டு
மெல்லச் சிரிப்பானோ
தத்தி தத்தி நடந்து
செல்லம் கொஞ்சுவானோ

பெண் : முக்கனி தேன் சுவை
சொல்லில் வடிப்பானோ
அன்னை சொல் கேட்டிடுவானோ
கண்ணன் ஆனந்த பால் குடிப்பானோ……

பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி
காண்பவர்கள் பாராட்டி
கொண்டாடும் இன்பமல்லவோ

பெண் : ஊரார்கள் வாழ்த்தி உன்னை
பாராட்டும் வேளையிலே
பேர் சூட்ட முடியாமல்
பெற்ற மனம் ஏங்குதடா

பெண் : நீராடும் இமையோரம்
போராட்டம் நடக்குதடா
சீராட்ட பாலூட்ட தாய்ப்பாசம் பிறக்குதடா
மகனே…….மகனே…….நீ வாழ்க…..

பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி
காண்பவர்கள் பாராட்டி
கொண்டாடும் இன்பமல்லவோ
இந்த கட்டி மகன் ஆடி வர
தொட்டிலொன்று போட்டு வைத்து
பாடுகின்ற வேளையல்லவோ….
பாடுகின்ற வேளையல்லவோ….

பெண் : தங்கப்பதக்கம் ஒன்று
வாங்கிக் கொடுப்பானோ
தாயென்னும் பெட்டகத்தில்
அன்பை நிறைப்பானோ
தலைவர்கள் வரிசையில் இடம் பிடிப்பானோ
தரணிக்கு புகழ் தருவானோ
கண்ணன் கீதையின் வழி நடப்பானோ

பெண் : கீதையில் கண்ணன் சொன்னான்
கடமைதான் வாழ்க்கையென்று
வேதத்திலும் வியாசன் சொன்னான்
வாழ்க்கை கடமைக்கென்று

பெண் : கீதை வழி நான் நடந்து
குடும்ப நலம்தனை நினைந்து
பாதியிலே உனைப் பிரியும்
பயணம் வந்து சேர்ந்ததடா
மகனே…….மகனே…….நீ வாழ்க…….

பெண்கள் : கண்ணனுக்கு பேர் சூட்டி
காண்பவர்கள் பாராட்டி
கொண்டாடும் இன்பமல்லவோ
இந்த கட்டி மகன் ஆடி வர
தொட்டிலொன்று போட்டு வைத்து
பாடுகின்ற வேளையல்லவோ….
பாடுகின்ற வேளையல்லவோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here