Singer : A. G. Rathnamala

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Pogadhae pogadhae en kanava
Polladha soppanum naanum kanden
Polladha soppanum naanum kanden
Male : Enna soppanum kandaai

Female : Koondhal avizhndhu vizhavum kanden aiyoo
Kondaiyil poovum karuga kanden
Kondaiyil poovum karuga kanden
Aandhai irundhu alara kanden
Yaanaiyum man melae saayakanden
Pattathu yaanaiyum man melae saayakanden

Female : Vaazhai thoppu azhiya kanden….
Vaazhai thoppu azhiya kanden
Aiyoo malligai thottamum vaada kanden
Paazhooragavae poga kanden
Indha paanjai nagaram azhiya kanden
Naan paanjai nagaram azhiya kanden
Adhu mattuma

Female : Kulikka manjal araithaen athaan
Adhu kombangari pola pochuthuthaan
Kottai madhilum idiya kanden
Nattai vittoru pen poga kanden
Panjai nattaivittoru pen poga kanden

Female : Pogadhae pogadhae en kanava
Polladha soppanum naanum kanden
Polladha soppanum naanum kanden

பாடகி : ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ஆண் : என்ன சொப்பனம் கண்டாய்

பெண் : கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் அய்யோ
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
யானையும் மண் மேலே சாயக் கண்டேன்
பட்டத்து யானையும் மண் மேலே சாயக் கண்டேன்

பெண் : வாழைத் தோப்பு அழியக் கண்டேன்
வாழைத் தோப்பு அழியக் கண்டேன்
அய்யோ மல்லிகை தோட்டமும் வாடக் கண்டேன்
பாழூராகவே போகக் கண்டேன்
இந்த பாஞ்சை நகரம் அழியக் கண்டேன்
நான் பாஞ்சை நகரம் அழியக் கண்டேன்
அது மட்டுமா…

பெண் : குளிக்க மஞ்சள் அரைத்தேன் அத்தான்
அது கொம்பங்கரி போல போச்சுதத்தான்
கோட்டை மதிலும் இடியக் கண்டேன்
நாட்டை விட்டொரு பெண் போகக் கண்டேன்
பாஞ்சை நாட்டை விட்டொரு பெண் போகக் கண்டேன்

பெண் : போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here