Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : ………………….

Female : Kadhalikka kattrukkollungal
En azhaginilae en vizhigalilae

Male : Kadhalikka sollum vannangal
Un malargalilae un idhazhgalilae

Female : Kadhalikka kattrukkollungal
En azhaginilae en vizhigalilae

Male : Vairam polum natchaththirangal
Vaari vaiththa kannam rendum
Kannaadi pol aaduthu

Female : Vattam podum mottu poovai
Thittam pottu thottu paarththaal
Yaen endru yaar ketpathu

Male : Un malargalilae un idhazhgalilae
Female : En azhaginilae en vizhigalailae

Male : Kadhalikka sollum vannangal
Un malargalilae un idhazhgalilae

Female : Kadhalikka kattrukkollungal
En azhaginilae en vizhigalilae

Male : Vetkkam angae vegam ingae
Katti kondaal acham engae
Ariyaatha mugamaa idhu

Female : Engae enthan nenjam undo
Angae unthan manjam undu
Kaniyaatha uravaa idhu

Male : Un malargalilae un idhazhgalilae
Female : En azhaginilae en vizhigalailae

Female : Kadhalikka kattrukkollungal
En azhaginilae en vizhigalilae
Male : Kadhalikka sollum vannangal
Un malargalilae un idhazhgalilae

Male : Kangal ennum pallikkoodam
Penmai sollum inba paadam
Enakkaaga uruvaanatho

Female : Katti thangam minnum angam
Kaalam yaavum kadhal sangam
Pirivaethu nam vaazhvilae

Male : Un malargalilae un idhazhgalilae
Female : En azhaginilae en vizhigalailae

Male : Kadhalikka sollum vannangal
Un malargalilae un idhazhgalilae
Female : Kadhalikka kattrukkollungal
En azhaginilae en vizhigalilae

Female : …………………

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………………………

பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே உன் இதழ்களிலே

பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

ஆண் : வைரம் போலும் நட்சத்திரங்கள்
வாரி வைத்த கன்னம் ரெண்டும்
கண்ணாடி போல் ஆடுது

பெண் : வட்டம் போடும் மொட்டு பூவை
திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால்
ஏன் என்று யார் கேட்பது

ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே
பெண் : என் அழகினிலே என் விழிகளிலே

ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே உன் இதழ்களிலே

பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

ஆண் : வெட்கம் அங்கே வேகம் இங்கே
கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே
அறியாத முகமா இது

பெண் : எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ
அங்கே உந்தன் மஞ்சம் உண்டு
கனியாத உறவா இது

ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே
பெண் : என் அழகினிலே என் விழிகளிலே

பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே
ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே உன் இதழ்களிலே

ஆண் : கண்கள் என்னும் பள்ளிக்கூடம்
பெண்மை சொல்லும் இன்ப பாடம்
எனக்காக உருவானதோ….

பெண் : கட்டித் தங்கம் மின்னும் அங்கம்
காலம் யாவும் காதல் சங்கம்
பிரிவேது நம் வாழ்விலே

ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே
பெண் : என் அழகினிலே என் விழிகளிலே

ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே உன் இதழ்களிலே
பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

பெண் : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here