Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Humming : …………..

Male : Oosaiyilladha mozhi
Uravamilladha mozhi
Thoodhu sendru varum mozhi
Adhai sollum kaadhalargal vizhi ahaahaa

Female : Oosaiyilladha mozhi
Uravamilladha mozhi
Thoodhu sendru varum mozhi
Adhai sollum kaadhalargal vizhi ahaahaa
Both : Oosaiyilladha mozhi

Male : Paravai jodigal uravu kolvadhum
Baashai pesithaano
Female : Malarum poovilae amarum vandaiyum
Uvamai sollalaama

Male : Paravai jodigal uravu kolvadhum
Baashai pesithaano
Female : Malarum poovilae amarum vandaiyum
Uvamai sollalaama

Male : Nadhigal oodum ottam
Female : Adhan karaiyil aadum thottam
Both : Nadhiyinal varum thottam polave
Namadhu kaadhal naattam namadhu kaadhal nattam

Male : Oosaiyilladha mozhi
Female : Uravamilladha mozhi
Male : Thoodhu sendru varum mozhi
Female : Adhai sollum kaadhalargal vizhi ahaahaa
Both : Oosaiyilladha mozhi

Male : Pachai pullinaal malaiyil aandavan
Methai pottu vaithaan
Female : Pakkam pakkamaai iruvar nenjaiyum
Pazhagi paarkka veithaan

Male : Pachai pullinaal malaiyil aandavan
Methai pottu vaithaan
Female : Pakkam pakkamaai iruvar nenjaiyum
Pazhagi paarkka veithaan

Male : Thottu paarkka veithaan
Female : Thodarnthu pesa veithaan
Both : Kottum venpani kulirilae
Sugam kondu vandhu veithaan

Male : Oosaiyilladha mozhi
Female : Uravamilladha mozhi
Male : Thoodhu sendru varum mozhi
Female : Adhai sollum kaadhalargal vizhi ahaahaa
Both : Oosaiyilladha mozhi

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : …………..

ஆண் : ஓசையில்லாத மொழி
உருவமில்லாத மொழி
தூது சென்று வரும் மொழி அதைச்
சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ்

பெண் : ஓசையில்லாத மொழி
உருவமில்லாத மொழி
தூது சென்று வரும் மொழி அதைச்
சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ்
இருவரும் : ஓசையில்லாத மொழி

ஆண் : பறவை ஜோடிகள் உறவு கொள்வதும்
பாஷைப் பேசிதானோ
பெண் : மலரும் பூவிலே அமரும் வண்டையும்
உவமை சொல்லலாமா

ஆண் : பறவை ஜோடிகள் உறவு கொள்வதும்
பாஷைப் பேசிதானோ
பெண் : மலரும் பூவிலே அமரும் வண்டையும்
உவமை சொல்லலாமா

ஆண் : நதிகள் ஓடும் ஓட்டம்
பெண் : அதன் கரையில் ஆடும் தோட்டம்
இருவரும் : நதியினால் வரும் தோட்டம் போலவே
நமது காதல் நாட்டம் நமது காதல் நாட்டம்

ஆண் : ஓசையில்லாத மொழி
பெண் : உருவமில்லாத மொழி
ஆண் : தூது சென்று வரும் மொழி அதைச்
பெண் : அதை சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ்
இருவரும் : ஓசையில்லாத மொழி

ஆண் : பச்சைப் புல்லினால் மலையில் ஆண்டவன்
மெத்தை போட்டு வைத்தான்
பெண் : பக்கம் பக்கமாய் இருவர் நெஞ்சையும்
பழகிப் பார்க்க வைத்தான்

ஆண் : பச்சைப் புல்லினால் மலையில் ஆண்டவன்
மெத்தை போட்டு வைத்தான்
பெண் : பக்கம் பக்கமாய் இருவர் நெஞ்சையும்
பழகிப் பார்க்க வைத்தான்

ஆண் : தொட்டுப் பார்க்க வைத்தான்
பெண் : தொடர்ந்து பேச வைத்தான்
இருவரும் : கொட்டும் வெண்பனிக் குளிரிலே
சுகம் கொண்டு வந்து வைத்தான்

ஆண் : ஓசையில்லாத மொழி
பெண் : உருவமில்லாத மொழி
ஆண் : தூது சென்று வரும் மொழி அதைச்
பெண் : அதை சொல்லும் காதலர்கள் விழி ஆஹாஹ்
இருவரும் : ஓசையில்லாத மொழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here