Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Lyrics by : Kannadasan

Female : Nandri solla vendum iraivanukku
Male : Nalla vazhi sonnaan iruvarukku

Female : Nandri solla vendum iraivanukku
Male : Nalla vazhi sonnaan iruvarukku
Female : Nandri solla vendum iraivanukku
Male : Nalla vazhi sonnaan iruvarukku
Both : Nandri solla vendum iraivanukku

Female : Kandrugal aadidum kazhanigal polae
Kannanin anantha kogulam polae
Kandrugal aadidum kazhanigal polae
Kannanin anantha kogulam polae

Male : Ingoru maaligai amainthathinaalae
Ingoru maaligai amainthathinaalae
Idhyam yaettrum dheepangalaalae
Both : Nandri solla vendum iraivanukku

Female : Irandukku melae edhu vendum
Male : Iravukku kadhal nilai vendum
Female : Irandukku melae edhu vendum
Male : Iravukku kadhal nilai vendum

Female : Pillaigal pothum ini enakku
Pillaigal pothum ini enakku
Male : Naan pirinthirunthaal avai yaedhunakku
Naan pirinthirunthaal avai yaedhunakku

Both : Nandri solla vendum iraivanukku
Nalla vazhi sonnaan iruvarukku

Both : Nandri solla vendum iraivanukku

Male : Thaaimaiyilum udal jolikkindrath
Thaaimaiyilum udal jolikkindrath
Female : En thalaivan nenjai azhaikkindrathu
En thalaivan nenjai azhaikkindrathu

Male : Mazhalai kangalai maraikkindrathu
Kangalai maraikkindrathu
Female : Ungal manathai purinthae sirikkindrathu
Both : Nandri solla vendum iraivanukku

Male : Thangakkatti polae manaivi undu
Female : Singakkutti polae mazhalai undu
Male : Thangakkatti polae manaivi undu
Female : Singakkutti polae mazhalai undu

Male : Veettukku naduvae sorkkam undu
Veettukku naduvae sorkkam undu
Female : Mm vidungal ippothu vetkkamundu

Both : Nandri solla vendum iraivanukku
Nalla vazhi sonnaan iruvarukku
Nandri solla vendum iraivanukku

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
ஆண் : நல்ல வழி சொன்னான் இருவருக்கு

பெண் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
ஆண் : நல்ல வழி சொன்னான் இருவருக்கு
பெண் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
ஆண் : நல்ல வழி சொன்னான் இருவருக்கு
இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு

பெண் : கன்றுகள் ஆடிடும் கழனிகள் போலே
கண்ணனின் ஆனந்த கோகுலம் போலே
கன்றுகள் ஆடிடும் கழனிகள் போலே
கண்ணனின் ஆனந்த கோகுலம் போலே

ஆண் : இங்கொரு மாளிகை அமைந்ததினாலே
இங்கொரு மாளிகை அமைந்ததினாலே
இதயம் ஏற்றும் தீபங்களாலே
இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு

பெண் : இரண்டுக்கு மேலே எது வேண்டும்
ஆண் : இரவுக்குக் காதல் நிலை வேண்டும்
பெண் : இரண்டுக்கு மேலே எது வேண்டும்
ஆண் : இரவுக்குக் காதல் நிலை வேண்டும்

பெண் : பிள்ளைகள் போதும் இனி எனக்கு
பிள்ளைகள் போதும் இனி எனக்கு
ஆண் : நான் பிரிந்திருந்தால் அவை ஏதுனக்கு
நான் பிரிந்திருந்தால் அவை ஏதுனக்கு

இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
நல்ல வழி சொன்னான் இருவருக்கு

இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு

ஆண் : தாய்மையிலும் உடல் ஜொலிக்கின்றது
தாய்மையிலும் உடல் ஜொலிக்கின்றது
பெண் : என் தலைவன் நெஞ்சை அழைக்கின்றது
என் தலைவன் நெஞ்சை அழைக்கின்றது

ஆண் : மழலை கண்களை மறைக்கின்றது
கண்களை மறைக்கின்றது
பெண் : உங்கள் மனதைப் புரிந்தே சிரிக்கின்றது
இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு

ஆண் : தங்கக்கட்டி போலே மனைவி உண்டு
பெண் : சிங்கக்குட்டி போலே மழலை உண்டு
ஆண் : தங்கக்கட்டி போலே மனைவி உண்டு
பெண் : சிங்கக்குட்டி போலே மழலை உண்டு

ஆண் : வீட்டுக்கு நடுவே சொர்க்கம் உண்டு
வீட்டுக்கு நடுவே சொர்க்கம் உண்டு
பெண் : ம்ம் விடுங்கள் இப்போது வெட்கமுண்டு

இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
நல்ல வழி சொன்னான் இருவருக்கு
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here