Kadhalukku Naalu Song Lyrics from Poi Sollathe – 1971 Film, Starring Ravichandran and Rajashree. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Female : Kadhalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male : Maadharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
Female : Kangalinaal ezhudhuvadhae mudhal pakkam
Kalandhu kollum idhayangalae irandaam pakkam
Male : Ennuvadhai solluvadhae moondraam pakkam
Eeruyirum inaivadhu thaan naalu pakkam
Female : Kadhalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male : Maadharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
Female : Aasai midhakaiyilae anna nadai podum
Aruginil vaavendraal chinna nadai podum
Male : Kattilukku selgaiyilae kanni nadai podum
Kaar irul panjaniayil enna nadai podum
Female : Kadhalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male : Maadharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
Female : Kaadhalanin paarvaiyilae thalai kavilum oru gunam
Kaigalukkul irukkaiyilae kann maraikkkum maru gunam
Male : Alli varum ninaivugalai adakki vaikkum oru gunam
Anaikkaiyilae athanaiyum maranthirukkum maru gunam
Female : Kadhalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male : Maadharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
Female : Thanakkul thanimaiyilae sirikkum mozhi ondru
Thalaimagan kangalukkum anuppum mozhi ondru
Male : Aasai malar poothathu pol veesum mozhi ondru
Aduthavarkku theriyaamal pesum mozhi ondru
Female : Kadhalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male : Maadharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : காதலுக்கு நாலு பக்கம்
கால்களுக்கு நாலு நடை
ஆண் : மாதருக்கு நாலு குணம்
மைவிழிக்கு நாலு மொழி
பெண் : கண்களினால் எழுதுவதே முதல் பக்கம்
கலந்து கொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம்
ஆண் : எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம்
ஈருயிரும் இணைவதுதான் நாலு பக்கம்
பெண் : காதலுக்கு நாலு பக்கம்
கால்களுக்கு நாலு நடை
ஆண் : மாதருக்கு நாலு குணம்
மைவிழிக்கு நாலு மொழி
பெண் : ஆசை மிதக்கையிலே அன்னநடை போடும்
அருகினில் வாவென்றால் சின்னநடை போடும்
ஆண் : கட்டிலுக்குச் செல்கையிலே கன்னி நடை போடும்
காரிருளில் பஞ்சணையில் என்ன நடை போடும்
பெண் : காதலுக்கு நாலு பக்கம்
கால்களுக்கு நாலு நடை
ஆண் : மாதருக்கு நாலு குணம்
மைவிழிக்கு நாலு மொழி
பெண் : காதலனின் பார்வையிலே தலை கவிழும் ஒரு குணம்
கைகளுக்குள் இருக்கையிலே கண் மறைக்கும் மறு குணம்
ஆண் : அள்ளி வரும் நினைவுகளை அடக்கி வைக்கும் ஒரு குணம்
அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறுகுணம்
பெண் : காதலுக்கு நாலு பக்கம்
கால்களுக்கு நாலு நடை
ஆண் : மாதருக்கு நாலு குணம்
மைவிழிக்கு நாலு மொழி
பெண் : தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று
தலைமகன் கண்களுக்கும் அனுப்பும் மொழி ஒன்று
ஆண் : ஆசைமலர் பூத்ததுபோல் வீசும் மொழி ஒன்று
அடுத்தவர்க்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று (காதலுக்கு)
பெண் : காதலுக்கு நாலு பக்கம்
கால்களுக்கு நாலு நடை
ஆண் : மாதருக்கு நாலு குணம்
மைவிழிக்கு நாலு மொழி