Netru Veru Song Lyrics from Vijeya – 1973 Film, Starring Jai Sankar, Lakshmi, Major Sundararajan and Others. This song was sung by T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam and the music was composed by G.Devarajan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam
Music by : G. Devarajan
Lyrics by : Kannadasan
Male : Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
Male : Maattrugindra aadai veru anigalan veru
Dhinam maarugindra ulagil neeyum maari paaru
Aah thathaa maari paaru
Male : Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
Male : Aadai maattri vaazhvathalla naagareegam dhinam
Anbu seithu dharmam kaakkum naagareegam
Aadai maattri vaazhvathalla naagareegam dhinam
Anbu seithu dharmam kaakkum naagareegam
Male : Iraivan meethu bakthiyulla naagareegam
Adhil idhayamulla pazhamaiyaana naagareegam
Male : Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
Male : Chandhiranil irangugindra
Manithan engae
Indrum chandhiranai vanangugindra
Neengal engae
Male : Chandhiranil irangugindra
Manithan engae
Indrum chandhiranai vanangugindra
Neengal engae
Male : Koyil thedi poojai
Seiyya neramillai
Naangal kondu vantha
Pudhumaikkindru eedumillai
Male : Naadagaththu thoonai pola
Side-u irakki
Antha narikkuravar pol maniyai
Kazhuththil adukki
Male : Naadagaththu thoonai pola
Side-u irakki
Antha narikkuravar pol maniyai
Kazhuththil adukki
Male : Kudukuduppaikkaaran pola
Sattaiyai pottu
Neengal kondu vantha pudhumai
Verum veththu vettu
Male : Ettu muzhal vettiyai
Naan sumakka mudiyumaa illa
Yaezhu muzham thundai
Naanum thaanga mudiyumaa
Male : Ettu muzhal vettiyai
Naan sumakka mudiyumaa illa
Yaezhu muzham thundai
Naanum thaanga mudiyumaa
Male : Pattaiyaaga neerumittaal
Sagikka mudiyumaa ungal
Paramparaiyai intha kaalam
Ninaikka mudiyumaa
Male : Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
Male : Aahahaa
Nettru veru indru veru naalai veru
Dhinam naagareegam enpatharkku arththam veru
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு
நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு
ஆண் : மாற்றுகின்ற ஆடை வேறு அணிகலன் வேறு
தினம் மாறுகின்ற உலகில் நீயும் மாறிப் பாரு….
ஆஹ் தாத்தா மாறி பாரு
ஆண் : நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு
நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு
ஆண் : ஆடை மாற்றி வாழ்வதல்ல நாகரீகம் தினம்
அன்பு செய்து தர்மம் காக்கும் நாகரீகம்
ஆடை மாற்றி வாழ்வதல்ல நாகரீகம் தினம்
அன்பு செய்து தர்மம் காக்கும் நாகரீகம்
ஆண் : இறைவன் மீது பக்தியுள்ள நாகரீகம்
அதில் இதயமுள்ள பழமையான நாகரீகம்…….
ஆண் : நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு
ஆண் : சந்திரனில் இறங்குகின்ற
மனிதன் எங்கே
இன்றும் சந்திரனை வணங்குகின்ற
நீங்கள் எங்கே…
ஆண் : சந்திரனில் இறங்குகின்ற
மனிதன் எங்கே
இன்றும் சந்திரனை வணங்குகின்ற
நீங்கள் எங்கே…
ஆண் : கோயில் தேடி பூஜை
செய்ய நேரமில்லை
நாங்கள் கொண்டு வந்த
புதுமைக்கின்று ஈடுமில்லை….
ஆண் : நாடகத்து தூணைப் போல
சைடு இறக்கி
அந்த நரிக்குறவர் போல் மணியை
கழுத்தில் அடுக்கி
ஆண் : நாடகத்து தூணைப் போல
சைடு இறக்கி
அந்த நரிக்குறவர் போல் மணியை
கழுத்தில் அடுக்கி
ஆண் : குடுகுடுப்பைக்காரன் போல
சட்டையைப் போட்டு
நீங்கள் கொண்டு வந்த புதுமை
வெறும் வெத்து வேட்டு
ஆண் : எட்டு முழம் வேட்டியை
நான் சுமக்க முடியுமா இல்லை
ஏழு முழம் துண்டை
நானும் தாங்க முடியுமா
ஆண் : எட்டு முழம் வேட்டியை
நான் சுமக்க முடியுமா இல்லை
ஏழு முழம் துண்டை
நானும் தாங்க முடியுமா
ஆண் : பட்டையாக நீருமிட்டால்
சகிக்க முடியுமா உங்கள்
பரம்பரையை இந்த காலம்
நினைக்க முடியுமா….
ஆண் : நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு
ஆண் : ஆஹஹா
நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு
தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு