Kaithozhil Ondrai Katrukkol Song Lyrics from Kadavulin Kuzhandhai –  1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by P. B. Srinivas and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal Kavignar V. Ramalingam Pillai.

Singers : P. B. Srinivas

Music by : G. Ramanathan

Lyrics by : Namakkal Kavignar V. Ramalingam Pillai

Male : Kai thozhil ondrai kattrukkol
Kavalai unakkillai oppukkol
Eththozhil edhuvum theriyaamal
Iruppathu unakke sariyaamo

Male : Kai thozhil ondrai kattrukkol
Kavalai unakkillai oppukkol
Eththozhil edhuvum theriyaamal
Iruppathu unakke sariyaamo

Male : Uzhavum thozhilum illaamal
Ulagil ondrum sellaathu
Uzhavum thozhilum illaamal
Ulagil ondrum sellaathu

Male : Vizhavum kalaiyum viruthugalum
Verula inbamum irunthidumo
Vizhavum kalaiyum viruthugalum
Verula inbamum irunthidumo
Aahahahaa ohho aahahahaa mmmm

Male : Kai thozhil ondrai kattrukkol
Kavalai unakkillai oppukkol

Male : Kollarum thachcharum koodaamal
Koodamum maadamum veedaamo
Kollarum thachcharum koodaamal
Koodamum maadamum veedaamo

Male : Kalladi sirpiyum thachcharume
Kaariyam palavunukkachchaani
Kalladi sirpiyum thachcharume
Kaariyam palavunukkachchaani
Aahahahaa aahahahaa

Male : Kai thozhil ondrai kattrukkol
Kavalai unakkillai oppukkol

Male : Nesavu kaararkal neiyaamal
Nilaththavar udaikken seivaargal
Nesavu kaararkal neiyaamal
Nilaththavar udaikken seivaargal

Male : Kuyavan seithidum paandamandro
Kudiththanam nadaththida vendumendrum
Kuyavan seithidum paandamandro
Kudiththanam nadaththida vendumendrum
Aahahahaa ohho aahahahaa mmmm

Male : Kai thozhil ondrai kattrukkol
Kavalai unakkillai oppukkol

Male : Salavai savaram seithaalum
Saakkaadai kazhuvuthal eithaalum
Salavai savaram seithaalum
Saakkaadai kazhuvuthal eithaalum

Male : Ulakukathanaal upakaaram
Ondrum theriyaar verum paaram
Ulakukathanaal upakaaram
Ondrum theriyaar verum paaram
Aahahahaa aahahahaa

Male : Kai thozhil ondrai kattrukkol
Kavalai unakkillai oppukkol
Eththozhil edhuvum theriyaamal
Iruppathu unakke sariyaamo

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை

ஆண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ

ஆண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ

ஆண் : உழவும் தொழிலும் இல்லாமல்
உலகில் ஒன்றும் செல்லாது
உழவும் தொழிலும் இல்லாமல்
உலகில் ஒன்றும் செல்லாது

ஆண் : விழவும் கலையும் விருதுகளும்
வேறுள இன்பமும் இருந்திடுமோ
விழவும் கலையும் விருதுகளும்
வேறுள இன்பமும் இருந்திடுமோ
ஆஹஹஹா ஓஹோஹோ ஆஹஹஹா ம்ம்ம்ம்

ஆண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்

ஆண் : கொல்லரும் தச்சரும் கூடாமல்
கூடமும் மாடமும் வீடாமோ
கொல்லரும் தச்சரும் கூடாமல்
கூடமும் மாடமும் வீடாமோ

ஆண் : கல்லடி சிற்பியும் தச்சருமே
காரியம் பலவினுக்கச்சாணி
கல்லடி சிற்பியும் தச்சருமே
காரியம் பலவினுக்கச்சாணி
ஆஹஹஹா ஆஹஹஹா

ஆண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்

ஆண் : நெசவுக் காரர்கள் நெய்யாமல்
நிலத்தவர் உடைக்கென் செய்வார்கள்
நெசவுக் காரர்கள் நெய்யாமல்
நிலத்தவர் உடைக்கென் செய்வார்கள்

ஆண் : குயவன் செய்திடும் பாண்டமன்றோ
குடித்தனம் நடத்திட வேண்டுமென்றும்
குயவன் செய்திடும் பாண்டமன்றோ
குடித்தனம் நடத்திட வேண்டுமென்றும்
ஆஹஹஹா ஓஹோஹோ ஆஹஹஹா ம்ம்ம்ம்

ஆண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்

ஆண் : சலவை சவரம் செய்தாலும்
சாக்கடை கழுவுதல் எய்தாலும்
சலவை சவரம் செய்தாலும்
சாக்கடை கழுவுதல் எய்தாலும்

ஆண் : உலகுக்கதனால் உபகாரம்
ஒன்றும் தெரியார் வெறும் பாரம்
உலகுக்கதனால் உபகாரம்
ஒன்றும் தெரியார் வெறும் பாரம்
ஆஹஹஹா ஆஹஹஹா

ஆண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here