Singers : P. Susheela, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae

Female : Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae

Female : Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae

Female : Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae

Female : Noolai edukavum maalai thodukavum
Neram illaiyadiyo
Noolai edukavum maalai thodukavum
Neram illaiyadiyo..adiyoo

All : Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae
Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae

Female : Enni vaithen ezhettu muthukal kaanavillai

Female : Yeritu naan adhai paarkavillai
Maarbilum naan alli soodavillai

Female : Enni vaithen ezhettu muthukal kaanavillai

Female : Yeritu naan adhai paarkavillai
Maarbilum naan alli soodavillai

Female : Andha kannathil ennadi mutham onnu
Endha kallathanathil vandhadhadi

Female : Vaangi koduthadhum thaangi pidithadhum
Muthukalpol vandhu sindhudhadi

Female : Oru muthu iru muthu
Moomuthu naalmuthu ammamaa

Female : Pennuku ethanai muthamadi
Pennuku ethanai muthamadi

Female : Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae
Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae

Female : Hoo oo oo oo ooo

Female : Hoo oo oo oo ooo

Female : Hoo oo oo oo ooo

Female : Hoo oo oo oo ooo

Female : Haa.a.aa.a.aa..aaa

Female : Maamanmakkal thediya selvangal
yaarukadi

Female : Aadidum pillaigal perukadi
Minjiya selvangal oorukadi

Female : Kaiyil ulladhai kondingu vaazhvadhile
Indha illathil nimmadhi vaazhumadi

Female : Kaiyil ulladhai kondingu vaazhvadhilae
Indha illathil nimmadhi vaazhumadi

Female : Veetin nalathukum naatin nalathukum
Vetrumai enbadhae Illaiyadi

Female : Veetin nalathukum naatin nalathukum
Vetrumai enbadhae illaiyadi

Female : Veetuku
Female : Pillaiku
Female : Ooruku
Female : Naatuku
All : Pangitu vaazhvadhu endraikum nimmadhi
Pangitu vaazhvadhu endraikum nimmadhi
Hoo oo oo hoo oo oo
Haa.aaaa.aa.aa…
Hmm mm mm mm hmm mm mm

பாடகர்கள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர்  : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

பெண் : அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

பெண் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

பெண் : அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

பெண் : நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரமில்லையடியோ அடியோ

அனைவரும் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

பெண் : எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை

பெண் : ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை

பெண் : எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை

பெண் : ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை

பெண் : அந்தக் கன்னத்தில் என்னடி முத்தம் ஒன்னு
இந்தக் கன்னத்தில் வந்ததடி

பெண் : வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி

பெண் : ஒரு முத்து இரு முத்து
மும்முத்து நால் முத்து அம்மம்மா

பெண் : பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

பெண் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

பெண் : மாமன் மக்கள் தேடிய
செல்வங்கள் யாருக்கடி?

பெண் : ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி

பெண் : கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி

பெண் : கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி

பெண் : வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி

பெண் : வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி

பெண் : வீட்டுக்கு
     பெண் : பிள்ளைக்கு

பெண் : ஊருக்கு
    பெண் : நாட்டுக்கு
அனைவரும் : பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ..ஆஅ…ஆ…
ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here