Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Aada sonnaal aaduven
Aadum undhan aattam theeravae
Paada sonnaal paaduven
Aayul regai paarthu kooravae

Female : Enathu manathil oru
Erimalai vedippathu
Unakku theriyavillaiyaa
Unadhu mudivil oru
Thiripuram erivathu
Unakku theriyum andha
Neram varum varai

Female : Aada sonnaal aaduven
Aadum undhan aattam theeravae
Aada sonnaal aaduven

Female : Thullathae nee
Unakkendru undaana
Deivaththai vendikkol
Penn saabamoo palithidum
Eppodhum thappadhu kettukkol

Female : Muttaalgal vethaithathu
Mullaaga vilaindhadhu
Kattaayam aruththu kolvaai
Unnalae azhinthathum
Kanneeril nanaithathum
Ennendru therinthu kolvaai

Female : Konjam poru nee paada
Naan ketkkiren
Kenji kenji nee aada
Naan paarkkiren
Dharmam ennum yuththam
Indrae thodangattum
Thanjam endrae undhan nenjam
Adangattum po po

Female : Aada sonnaal aaduven
Aadum undhan aattam theeravae

Female : Pennaalae thaan unakkoru
Aabaththu undaaga poguthae
Kanneeril thaan ulagathil
Boogambam aarambam aaguthae

Female : Appodhu nadanthathum
Ippodhu nadapathum
Paanchaali sabathangalae
Appodhu jeyithathum
Ippodhu jeyipathum
Saagatha dharmangalae

Female : Thaayin kannil neeralla
Thee oozhi thee
Thorpathu ingu yaar sollu
Naan alla nee
Pongum engal singam
Ingae varum varum
Rendil ondru endrae indrae
Ezhum ezhum paar paar……

Female : Aada sonnaal aaduven
Aadum undhan aattam theeravae
Paada sonnaal paaduven
Aayul regai paarthu kooravae

Female : Enathu manathil oru
Erimalai vedippathu
Unakku theriyavillaiyaa
Unadhu mudivil oru
Thiripuram erivathu
Unakku theriyum andha
Neram varum varai

Female : Aada sonnaal aaduven
Aadum undhan aattam theeravae
Aada sonnaal aaduven

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன்
ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே
பாடச் சொன்னால் பாடுவேன்
ஆயுள் ரேகை பார்த்துக் கூறவே

பெண் : எனது மனதில்
ஒரு எரிமலை வெடிப்பது
உனக்குத் தெரியவில்லையா…
உனது முடிவில் ஒரு திரிபுரம் எரிவது
உனக்கு தெரியும் அந்த
நேரம் வரும் வரை…

பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன்
ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே
ஆடச் சொன்னால் ஆடுவேன்

பெண் : துள்ளாதே நீ உனக்கென்று
உண்டான தெய்வத்தை
வேண்டிக்கொள்
பெண் சாபமோ பலித்திடும்
எப்போதும் தப்பாது கேட்டுக்கொள்

பெண் : முட்டாள்கள் விதைத்தது
முள்ளாக விளைந்தது
கட்டாயம் அறுத்துக் கொள்வாய்
உன்னாலே அழிந்ததும்
கண்ணீரில் நனைந்ததும்
என்னென்று தெரிந்துகொள்வாய்

பெண் : கொஞ்சம் பொறு நீ பாட
நான் கேட்கிறேன்
கெஞ்சிக் கெஞ்சி நீ ஆட
நான் பார்க்கிறேன்
தர்மம் என்னும் யுத்தம்
இன்றே தொடங்கட்டும்
தஞ்சம் என்றே உந்தன் நெஞ்சம்
அடங்கட்டும் போ போ…..

பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன்
ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே

பெண் : பெண்ணாலேதான் உனக்கொரு
ஆபத்து உண்டாகப் போகுதே
கண்ணீரில்தான் உலகத்தில்
பூகம்பம் ஆரம்பம் ஆகுதே

பெண் : அப்போது நடந்ததும்
இப்போது நடப்பதும்
பாஞ்சாலி சபதங்களே…
அப்போது ஜெயித்ததும்
இப்போது ஜெயிப்பதும்
சாகாத தருமங்களே..

பெண் : தாயின் கண்ணில் நீரல்ல தீ ஊழித்தீ
தோற்பதிங்கு யார் சொல்லு நானல்ல நீ
பொங்கும் எங்கள் சிங்கம்
இங்கே வரும் வரும்
ரெண்டில் ஒன்று என்றே இன்றே
எழும் எழும் பார் பார்………

பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன்
ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே
பாடச் சொன்னால் பாடுவேன்
ஆயுள் ரேகை பார்த்துக் கூறவே

பெண் : எனது மனதில்
ஒரு எரிமலை வெடிப்பது
உனக்குத் தெரியவில்லையா…
உனது முடிவில் ஒரு திரிபுரம் எரிவது
உனக்கு தெரியும் அந்த
நேரம் வரும் வரை…

பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன்
ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே
ஆடச் சொன்னால் ஆடுவேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here