Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai
Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai

Male : Paada vanthaal intha vanna silai
En paattukkul irukuthu sontha kadhai
Paada vanthaal intha vanna silai
En paattukkul irukuthu sontha kadhai

Male : Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai

Male : Maan magal sagunthalai vanathil vanthaal
Maamannan dhushyanthan aasai kondaan
Maan magal sagunthalai vanathil vanthaal
Maamannan dhushyanthan aasai kondaan

Male : Thaenilavai saatchi vaithu maalaiyittaal
Aval thedi vantha velaiyilae nee yaar endraan
Thaenilavai saatchi vaithu maalaiyittaal
Aval thedi vantha velaiyilae nee yaar endraan

Male : Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai

Male : Iravukku vilakettra nilavu varum
Antha nilavukku ival mugam azhagu tharum
Iravukku vilakettra nilavu varum
Antha nilavukku ival mugam azhagu tharum

Male : Azhagulla ilam pennin kangalai paar
Adhu ambu pol un nenjil paaivathai paar

Male : Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai

Male : Saetrilae thamarai pirakkum angae
Intha thamarai piranthathu unnaal ingae
Nanaththai maranthavargal naattil kodi
Ival nattiyam mudinthathum theriyum saedhi
Ival nattiyam mudinthathum theriyum saedhi
Theriyum saedhi….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை
ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை

ஆண் : பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை
என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை
பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை
என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை

ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை

ஆண் : மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள்
மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான்
மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள்
மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான்

ஆண் : தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான்
அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான்
தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான்
அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான்

ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை

ஆண் : இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும்
அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும்
இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும்
அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும்

ஆண் : அழகுள்ள இளம் பெண்ணின் கண்களை பார்
அது அம்பு போல் உன் நெஞ்சில் பாய்வதை பார்

ஆண் : ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை

ஆண் : சேற்றிலே தாமரை பிறக்கும் அங்கே
இந்த தாமரை பிறந்தது உன்னால் இங்கே
நாணத்தை மறந்தவர்கள் நாட்டில் கோடி
இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி…..
இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி…..
தெரியும் சேதி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here