Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ……………..

Female : Aadalaamaa annanadai pinnalida
Aasai pongum sonthamallavo
Aadalaamaa annanadai pinnalida
Aasai pongum sonthamallavo

Female : Paadalaamaa palliyarai paada ondru
Paasamulla panthamallavo
Paadalaamaa palliyarai paada ondru
Paasamulla panthamallavo

Female : Vanna senthooram minnalidum paavam
Vanthu nindraalae verum enna thevai
Vanna senthooram minnalidum paavam
Vanthu nindraalae verum enna thevai

Female : Unnai kaanaamal indru enna velai
Ullam thaalaama vanthathu intha solai
Unnai kaanaamal indru enna velai
Ullam thaalaama vanthathu intha solai

Female : Aadalaamaa annanadai pinnalida
Aasai pongum sonthamallavo
Paadalaamaa palliyarai paada ondru
Paasamulla panthamallavo

Female : Mullendru sonnaalum
Poovendru sonnaalum
Rojaavin perallavo

Female : Kallendru sonnaalum
Kaniyendru sonnaalum
Kalyaani naanallavo

Female : Mullendru sonnaalum
Poovendru sonnaalum
Rojaavin perallavo

Female : Kallendru sonnaalum
Kaniyendru sonnaalum
Kalyaani naanallavo

Female : Ullaththil ondrraaga sollodu ondraaga
Sollaatha pennallavo
Un perai allaamal verentha per meedhum
Saayaatha kannallavo

Female : Aadalaamaa annanadai pinnalida
Aasai pongum sonthamallavo
Paadalaamaa palliyarai paada ondru
Paasamulla panthamallavo

Male : …………….

Male : Kuyilena isai kondu
Mayilena nadai kondu
Urimai siragum kadamai mozhiyum niranthavalae
Enathu madiyil ulagam muzhuthum maranthavalae

Male : Sangeetham paadugindraal
En santhosam naadugindraal
Sangeetham paadugindraal
En santhosam naadugindraal
Ennodu aadugindraal
Than kannaalae pesugindraal

Male : Aadalaamaa annanadai pinnalida
Aasai pongum sonthamallavo
Aadalaamaa annanadai pinnalida
Aasai pongum sonthamallavo

Male : Santhana mohini kunguma raahini
Mangala megalai pongiya dhevathai
Rathiyum nadhiyum ivalae

Female : Vengada maalavan valliyin velavan
Kanni naayagan mannavan maadhavan
Kanavum ninaivum ivanae

Male : Enakkoru pudhumugam koduththaval neeyadi
Female : Ninaikkaiyil inikkuthu mananthavan kaaladi
Male : Edukka edukk valarum kalaigal unathaey
Edukka edukka valarum kalaigal unathae
Aa….aa…..aa…..aaa…..aaa….aa…..aa…..aaa……

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………….

பெண் : ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசை பொங்கும் சொந்தமல்லவோ
ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசை பொங்கும் சொந்தமல்லவோ

பெண் : பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

பெண் : வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை
வந்து நின்றாலே வேறு என்ன தேவை
வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை
வந்து நின்றாலே வேறு என்ன தேவை

பெண் : உன்னை காணாமல் இன்று என்ன வேலை
உள்ளம் தாளாமல் வந்தது இந்த சோலை
உன்னை காணாமல் இன்று என்ன வேலை
உள்ளம் தாளாமல் வந்தது இந்த சோலை

பெண் : ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசை பொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

பெண் : முள்ளென்று சொன்னாலும்
பூவென்று சொன்னாலும்
ரோஜாவின் பேரல்லவோ

பெண் : கல்லென்று சொன்னாலும்
கனியென்று சொன்னாலும்
கல்யாணி நானல்லவோ

பெண் : முள்ளென்று சொன்னாலும்
பூவென்று சொன்னாலும்
ரோஜாவின் பேரல்லவோ

பெண் : கல்லென்று சொன்னாலும்
கனியென்று சொன்னாலும்
கல்யாணி நானல்லவோ

பெண் : உள்ளத்தில் ஒன்றாக சொல்லோடு ஒன்றாக
சொல்லாத பெண்ணல்லவோ
உன் பேரை அல்லாமல் வேறெந்த பேர் மீதும்
சாயாத கண்ணல்லவோ…..

பெண் : ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசை பொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

ஆண் : ………………………

ஆண் : குயிலென இசை கொண்டு
மயிலென நடை கொண்டு
உரிமை சிறகும் கடமை மொழியும் நிறைந்தவளே
எனது மடியில் உலகம் முழுதும் மறந்தவளே

ஆண் : சங்கீதம் பாடுகின்றாள்
என் சந்தோசம் நாடுகின்றாள்
சங்கீதம் பாடுகின்றாள்
என் சந்தோசம் நாடுகின்றாள்
என்னோடு ஆடுகின்றாள்
தன் கண்ணாலே பேசுகின்றாள்

ஆண் : ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசை பொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

ஆண் : சந்தன மோகினி குங்கும ராகினி
மங்கல மேகலை பொங்கிய தேவதை
ரதியும் நதியும் இவளே

பெண் : வேங்கட மாலவன் வள்ளியின் வேலவன்
கன்னி நாயகன் மன்னவன் மாதவன்
கனவும் நினைவும் இவனே

ஆண் : எனக்கொரு புதுமுகம் கொடுத்தவள் நீயடி
பெண் : நினைக்கையில் இனிக்குது மணந்தவன் காலடி
ஆண் : எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே
எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே
ஆ…..ஆஆ….ஆ…ஆஆ……ஆ..ஆ…ஆஆ…..ஆ…ஆ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here