Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : R. Sudharsanam

Lyrics by : Kannadasan

Male : Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae
Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae

Female : Idhil aada ninaikudhu aasai manam
Aada ninaikudhu aasai manam
Adhu ariyaadhoo varum asthamanam
Male : Aadhavan udhithaan malai melae

Male : Azhagiya malargal sirikkindrana
Female : Avai adutha ulagai ninaikkindrana
Male : Azhagiya malargal sirikkindrana
Female : Avai adutha ulagai ninaikkindrana
Male : Pazhagiya kiligal thudikkindrana
Pazhagiya kiligal thudikkindrana
Female : Engoo parakka siragai virikkindrana
Hahahahaha

Male : Aadhavan udhithaan malai melae

Male : Vaanil parakkudhu vellai puraa..aa..
Vaanil parakkudhu vellai puraa
Female : Vedan valaiyai virithathu ariyaamal
Male : Vaanil parakkudhu vellai puraa
Female : Vedan valaiyai virithathu ariyaamal
Male : Aadi kalikudhu thogai mayil
Aadi kalikudhu thogai mayil
Female : Than aattam mudivadhu theriyaamal

Female : Than aattam mudivadhu theriyaamal

Male : Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae
Female : Idhil aada ninaikudhu aasai manam
Adhu ariyaadhoo varum asthamanam
Male : Aadhavan udhithaan malai melae

Male : Idhayam edhaiyo nenaikindradhu
Female : Adhil yen indha mayakkam pirakkindrathu
Male : Idhayam edhaiyo nenaikindradhu
Female : Adhil yen indha mayakkam pirakkindrathu

Male : Pudhiya paadhai therikkindrathu
Pudhiya paadhai therikkindrathu
Female : Adhu pogum pozhuthae mudigindrathu

பாடகர்கள் : டி எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

பெண் : இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே

ஆண் : அழகிய மலர்கள் சிரிக்கின்றன
பெண் : அவை அடுத்த உலகையே நினைக்கின்றன
ஆண் : அழகிய மலர்கள் சிரிக்கின்றன
பெண் : அவை அடுத்த உலகையே நினைக்கின்றன
ஆண் : பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
பெண் : எங்கோ பறக்கச் சிறகை விரிக்கின்றன…..ஹாஹாஹா

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே

ஆண் : வானில் பறக்குது வெள்ளைப் புறா..ஆஅ…
வானில் பறக்குது வெள்ளைப் புறா.
பெண் : வேடன் வலையை விரித்தது அறியாமல்
ஆண் : வானில் பறக்குது வெள்ளைப் புறா.
பெண் : வேடன் வலையை விரித்தது அறியாமல்
ஆண் : ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
பெண் : தன் ஆட்டம் முடிவது தெரியாமல்…..
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்…..

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
பெண் : இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

ஆண் : ஆதவன் உதித்தான் மலை மேலே

ஆண் : இதயம் எதையோ நினைக்கின்றது
பெண் : அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
ஆண் : இதயம் எதையோ நினைக்கின்றது
பெண் : அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
ஆண் : புதிய பாதை தெரிகின்றது…
புதிய பாதை தெரிகின்றது…
பெண் : அது போகும் பொழுதே முடிகின்றதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here