Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Male : Aadhi bhagavan thiruvadi vaazhga

Aadhi bhagavan thiruvadi vaazhga
Annai sakthi malaradi vaazhga
Vaedham vaazhga vaedhiyar vaazhga
Vilangum bhuvanam yaavaiyum vaazhga
Aadhi bhagavan thiruvadi vaazhga
Aa….aa….aa…

Male : Kannoli vazhangum kadhiravan vaazhga
Kaalangalaalae mudhiyavan vaazhga
Ponnoli thandhaai boomiyil engum
Pottrukindren naan vanangugindrenae
Aa…aa…

Male : Thannoli vazhangum chandhira deva
Saayum poluthil ulavum thalaivaa
Pen mugam endrae…aa…
Pen mugam endrae pesum porulae
Periyavanae unai vananungugindrenae

Male : Boomithaai petredutha pon magan neeyae
Pugazh perum sevvaai giragamum neeyae
Paavaiyar jaadhagam padaipavan neeyae
Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae
Panivudan unai vanangugindrenae

Male : Chandhiran thaarai thaai thandhaiyaaga
Vandhaai budhan enum mannavanaaga
Iyangum tholilgalin adhibadhi neeyae
Ilaiyavan naa unai vanangugindrenae..ae….

Male : Iru manam serndhu oru mugamaaga
Thirumana neram kurippavan neeyae
Viyaalan enum per kondaayae
Viyaalan enum per kondaayae
Melavanae unai vanangugindrenae

Male : Thottavai ellam ponnnai malarum
Sukkiranae un paarvai pattalae
Ullangal thedi udhavi seivaayae
Uyarnthavanae unai vanangugindrenae..ae…

Male : Kongu saniyendrum mangu saniyendrum
Vadivam palavaaga nindraai
Kongu saniyendrum mangu saniyendrum
Vadivam palavaaga nindraai
Thangum idam kandu sondha madam kandu
Nammai pala kodi seivaai
Saneeswara unai vanangugindren

Male : Manidhargal dhinam paarkkum
Kaalangal palavundu
Mayakkam tharum raaghu kaedhu
Or udal uyiraaga ulavidum giragangal
Ungalai vanangugindrenae

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆதி பகவன் திருவடி வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க
அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க
விளங்கும் புவனம் யாவையும் வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க
ஆஅ…ஆஅ….ஆ….

ஆண் : கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க
காலங்களாலே முதியவன் வாழ்க
பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்
போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே
ஆ…ஆஅ….

ஆண் : தண்ணொளி வழங்கும் சந்திர தேவா
சாயும் பொழுதில் உலவும் தலைவா
பெண் முகம் என்றே ..ஆஅ…
பெண் முகம் என்றே பேசும் பொருளே
பெரியவனே உனை வணங்குகின்றேனே

ஆண் : பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே
புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே
பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே
ஆ…பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே
பணிவுடன் உனை வணங்குகின்றேனே

ஆண் : சந்திரன் தாரை தாய் தந்தையாக
வந்தாய் புதன் எனும் மன்னனாக
இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே
இளையவன் நா உனை வணங்குகின்றேனே

ஆண் : இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக
திருமண நேரம் குறிப்பவன் நீயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
மேலவனே உனை வணங்குகின்றேனே

ஆண் : தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும்
சுக்கிரனே உன் பார்வை பட்டாலே
உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே
உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே

ஆண் : கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்
வடிவம் பலவாக நின்றாய்
கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்
வடிவம் பலவாக நின்றாய்
தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு
நன்மை பல கோடி செய்வாய்
சனீஸ்வரா…! உன்னை வணங்குகின்றேனே

ஆண் : மனிதர்கள் தினம் பார்க்கும்
காலங்கள் பலவுண்டு
மயக்கம் தரும் ராகு கேது
ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள்
உங்களை வணங்குகின்றேனே………!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here