Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Kaal…..muzhangaal…..araikkaal…..mukkaal
Muzhangaal muzhangaal mukkaal
Kai kai kai valakkai idakkai udukkai
Uduppu anivathu iduppu
Samaippathu aduppu thevai neruppu padagu thuduppu

Male : Panju poom malar anjum vannamigu
Kanja melladigal aadavae
Kaanthal menmalargal kaiviralgal thamai
Kandu kaadu vazhi odavae

Male : Konda thiraatchaiyathu konji vanthu
Vizhi thangi nindrapadi izhaiyodum asaiyuthu
Adhiloru malaranai kenjuthu

Male : Aadivaa azhagu rani
Aadivaa azhagu rani
Paaduvaen pudhiya paani
Thiramai engae theriyum ingae
Thiramai engae theriyum ingae

Male : Aadivaa azhagu rani

Male : Kovil silaigal gopuramaeri
Konjum kanigal thaenidai oori
Kovil silaigal gopuramaeri
Konjum kanigal thaenidai oori

Male : Kadhal vazhangum pennena maari
Kadhal vazhangum pennena maari
Kaninthathu pol sugam kalanthathu polae

Male : Aadivaa azhagu rani
Paaduvaen pudhiya paani

Male : Kambanin seedhai mithilaiyil nindru
Kannodu kanninai kalanthana endru
Semmani thamizhil seppiyathundu
Seethai unathu sinthaiyil kondu

Male : Kaalukku thottru vitta vaazhaigal kodi
Kattazhagodum idai pettagam aadi
Kaalukku thottru vitta vaazhaigal kodi
Kattazhagodum idai pettagam aadi

Male : Meludai moodi varum melangal vaadi
Meludai moodi varum melangal vaadi
Mella enai azhaikkum nallathai naadi

Male : Aadivaa azhagu rani
Paaduvaen pudhiya paani

Male : Marangalaada puvi nilangalaada
Mayil inangalaada nadamaaduga
Mazhaiyinodu mugil nadanamaada
Idi padhigam paada nadamaaduga

Male : Kanaigal pola puyal adigal pola
Kadal alaigal pola nadamaaduga
Inaiyillaatha udal suzhalumaaru thamizh
Isaiyinodu uravaaduga

Male : Thanthithom ena aaduga
Emai santhiththom ena aaduga
Thanthom thomena aaduga
Suvai thanthom naamena aaduga

Male : Thiththiththaavena thulluga
Emai thaththi kol ena solluga
Thiththikkol ena solluga
Thiththiththom ena aaduga
Idhazh thiththikkum ena kooduga

Male : Avaiyilaaduga manathilaaduga
Unarvilaaduga uravilaaduga
Suvayulla mathurasam ivaiyenumpadi
Thulli ezhunthisai paaduga nadamaaduga….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கால்…..முழங்கால்……அரைக்கால்….முக்கால்
முழங்கால் முழங்கால் முக்கால்…
கை கை கை வலக்கை இடக்கை உடுக்கை
உடுப்பு அணிவது இடுப்பு
சமைப்பது அடுப்பு தேவை நெருப்பு படகு துடுப்பு…

ஆண் : பஞ்சு பூசும் மலர் அஞ்சும் வண்ணமிகு
கஞ்ச மெல்லடிகள் ஆடவே…..
காந்தள் மென்மலர்கள் கைவிரல்கள் தமைக்
கண்டு காடு வழி ஓடவே…..

ஆண் : கொண்ட திராட்சையது கொஞ்சி வந்து
விழி தங்கி நின்றபடி அஞ்சுது
சிறுசிறு கொடியது இழையோடும் அசையுது
அதிலொரு மலரணைக் கெஞ்சுது

ஆண் : ஆடி வா அழகு ராணி
ஆடி வா அழகு ராணி
பாடுவேன் புதிய பாணி
திறமை எங்கே தெரியும் இங்கே…..
திறமை எங்கே தெரியும் இங்கே…..

ஆண் : ஆடி வா அழகு ராணி….

ஆண் : கோவில் சிலைகள் கோபுரமேறி
கொஞ்சும் கனிகள் தேனிடை ஊறி
கோவில் சிலைகள் கோபுரமேறி
கொஞ்சும் கனிகள் தேனிடை ஊறி

ஆண் : காதல் வழங்கும் பெண்ணென மாறி
காதல் வழங்கும் பெண்ணென மாறி
கனிந்தது போல் சுகம் கலந்தது போலே

ஆண் : ஆடி வா அழகு ராணி
பாடுவேன் புதிய பாணி

ஆண் : கம்பனின் சீதை மிதிலையில் நின்று
கண்ணோடு கண்ணினை கலந்தன என்று
செம்மணித் தமிழில் செப்பியதுண்டு
சீதையை உனது சிந்தையில் கொண்டு

ஆண் : காலுக்குத் தோற்று விட்ட வாழைகள் கோடி
கட்டழகோடும் இடைப் பெட்டகம் ஆடி
காலுக்குத் தோற்று விட்ட வாழைகள் கோடி
கட்டழகோடும் இடைப் பெட்டகம் ஆடி

ஆண் : மேலுடை மூடி வரும் மேளங்கள் வாடி
மேலுடை மூடி வரும் மேளங்கள் வாடி
மெல்ல எனை அழைக்கும் நல்லதை நாடி

ஆண் : ஆடி வா அழகு ராணி
பாடுவேன் புதிய பாணி

ஆண் : மரங்களாட புவி நிலங்களாட
மயில் இனங்களாட நடமாடுக
மழையினோடு முகில் நடனமாட
இடி பதிகம் பாட நடமாடுக

ஆண் : கணைகள் போல புயல் அடிகள் போல
கடல் அலைகள் போல நடமாடுக
இணையிலாத உடல் சுழலுமாறு தமிழ்
இசையினோடு உறவாடுக

ஆண் : தந்தித்தோம் என ஆடுக
எமை சந்தித்தோம் என ஆடுக
தந்தோம் தோமென ஆடுக
சுவை தந்தோம் நாமென ஆடுக

ஆண் : தித்தித்தாவெனத் துள்ளுக
எமை தத்திக் கொள் எனச் சொல்லுக
தித்திக் கொள் எனச் சொல்லுக
தித்தித்தோம் என ஆடுக
இதழ் தித்திக்கும் எனக் கூடுக

ஆண் : அவையிலாடுக மனதிலாடுக
உணர்விலாடுக உறவிலாடுக
சுவையுள்ள மதுரசம் இவையெனும்படி
துள்ளி எழுந்திசை பாடுக நடமாடுக……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here