Singers : P. Leela and Soolamangalam Rajalakshmi
Music by : K. V. Mahadevan
Both : Aadum azhagae azhagu
Asaindhu aadum azhagae azhagu
Sondha naadum kalaigal
Panpaadum uyara
Nadamaadum azhagae azhagu
Sondha naadum kalaigal
Panpaadum uyara
Nadamaadum azhagae azhagu
Female : Odum nadhiyil
Alai oyil polavae
Odum nadhiyil alai oyil polavae
Female : Kuyil paadum isaikku
Porul therindhu
Thogai mayil aadum azhagae azhagu
Both : Kuyil paadum isaikku
Porul therindhu
Thogai mayil aadum azhagae azhagu
Female : Oodhum magudi tharum
Osai thanai kettu
Oiyaaramaai naaga paambaadumae
Oodhum magudi tharum
Osai thanai kettu
Oiyaaramaai naaga paambaadumae
Female : Modhum vasantha
Thendral mogam therindhu
Muthu mullai nagai purindhu
Uravaadumae
Female : Modhum vasantha
Thendral mogam therindhu
Muthu mullai nagai purindhu
Uravaadumae
Both : Paadham padhindhu
Thandai oli seiyavae
Paadham padhindhu
Thandai oli seiyavae
Female : Nava bhaavam mmm mm mm
Female : Raagam mm…mm…mm..
Female : Thaalam mmm mmm mm mm
Both : Nava bhaavam raagam thaalam
Orungae amaindhu
Baradham aadum azhagae azhagu
Female : Pangayam pol kuvindha
Viralgalai neetti
Sengadhirai thingalai abinayam kootti
Both : Pangayam pol kuvindha
Viralgalai neetti
Sengadhirai thingalai abinayam kootti
Female : Mangala aadai anigalai pootti
Female : Aa…
Female : Aa…
Female : Aa…
Female : Aa…
Mangala aadai anigalai pootti
Kan kavar nadana kalai thiran kaatti
Both : Kan kavar nadana kalai thiran kaatti
Aadum azhagae azhagu
Female : Senthamizh kaaviyathai manam naada
Female : Sundhara thaai mozhiyin pughazh paada
Both : Senthamizh kaaviyathai manam naada
Sundhara thaai mozhiyin pugazh paada
Female : Konjidum veenaiyil viralaada
Konjidum veenaiyil viralaada
Female : Ulla sanjalam yaavum parandhoda
Both : Ulla sanjalam yaavum parandhoda
Magizhndhu
Aadum azhagae azhagu
Sondha naadum kalaigal panpaadum uyara
Nadamaadum azhagae azhagu
பாடகர்கள் : பி. லீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
இருவர் : ஆடும் அழகே அழகு
அசைந்து ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு
பெண் : ஓடும் நதியின்
அலை ஒயில் போலவே
ஓடும் நதியின்
அலை ஒயில் போலவே
பெண் : குயில் பாடும் இசைக்குப்
பொருள் தெரிந்து
தோகை மயில் ஆடும் அழகே அழகு
இருவர் : குயில் பாடும் இசைக்குப்
பொருள் தெரிந்து
தோகை மயில் ஆடும் அழகே அழகு
பெண் : ஊதும் மகுடி தரும்
ஓசைதனைக் கேட்டு
ஒய்யாரமாய் நாகப்பாம்பாடுமே
ஊதும் மகுடி தரும்
ஓசைதனைக் கேட்டு
ஒய்யாரமாய் நாகப்பாம்பாடுமே
பெண் : மோதும் வசந்தத்
தென்றல் மோகம் தெரிந்து
முத்து முல்லை நகை புரிந்து
உறவாடுமே
பெண் : மோதும் வசந்தத்
தென்றல் மோகம் தெரிந்து
முத்து முல்லை நகை புரிந்து
உறவாடுமே
இருவர் : பாதம் பதிந்து
தண்டை ஒலி செய்யவே
பாதம் பதிந்து
தண்டை ஒலி செய்யவே
பெண் : நவபாவம் ராகம் ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ராகம் ம்ம்ம் ம்ம் ம்ம்…..
பெண் : தாளம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
இருவர் : நவபாவம் ராகம் தாளம்
ஒருங்கே அமைந்து
பரதம் ஆடும் அழகே அழகு
பெண் : பங்கயம் போல் குவிந்த
விரல்களை நீட்டி
செங்கதிரை திங்களை அபிநயம் கூட்டி
இருவர் : பங்கயம் போல் குவிந்த
விரல்களை நீட்டி
செங்கதிரை திங்களை அபிநயம் கூட்டி
பெண் : மங்கள ஆடை அணிகளைப் பூட்டி
பெண் : ஆ….
பெண் : ஆ….
பெண் : ஆ….
பெண் : ஆ….
மங்கள ஆடை அணிகளைப் பூட்டி
கண்கவர் நடனக் கலைத்திறன் காட்டி
பெண் : செந்தமிழ்க் காவியத்தை மனம் நாட
பெண் : சுந்தரத் தாய்மொழியின் புகழ் பாட
இருவர் : செந்தமிழ்க் காவியத்தை மனம் நாட
சுந்தரத் தாய்மொழியின் புகழ் பாட
பெண் : கொஞ்சிடும் வீணையில் விரலாட
கொஞ்சிடும் வீணையில் விரலாட
பெண் : உள்ள சஞ்சலம் யாவும் பறந்தோட
இருவர் : உள்ள சஞ்சலம் யாவும் பறந்தோட
மகிழ்ந்து
ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள் பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு