Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
Female : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
Male : Aatrangaraiyoo thottakalaiyoo
Aadai pinnum pinnal enna moodum thiraiyoo
Female : Athipazhamoo muthusaramoo
Annam polae minnum kanni athai magalo
Male : Idhil sandhegama
Female : Vilai en dhegama
Male : Idhil sandhegama
Female : Vilai en dhegama
Male : Ada oodal seidhaal
Pennukenna sandhosam
Female : Siru oodal endraal
Nanam thaanae sanyasama
Male : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Female : Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
Female : Velli vattamoo konjam thittamoo
Katti katti konjam
Inbam indru mattumo
Male : Indru maattumo endrum varumo
Kaalam sella sella ullam
Vegam kollumoo
Female : Sugam polladhadhu
Male : Mudivilladhadhu
Female : Sugam polladhadhu
Male : Mudivilladhadhu
Female : Andha sorgam kooda
Pakkam vandhaal nilladhadhu
Male : Anage acham naanam vetkam
Ellaam selladhadhu
Male : Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Female : Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
பாடகர்கள் : டி. எம் .சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
பெண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
ஆண் : ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
பெண் : அத்திப்பழமோ முத்துச்சரமோ
அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ
ஆண் : இதில் சந்தேகமா
பெண் : விலை என் தேகமா
ஆண் : இதில் சந்தேகமா
பெண் : விலை என் தேகமா
ஆண் : அட ஊடல் செய்தால்
பெண்ணுக்கென்ன சந்தோஷமா
பெண் : சிறு ஊடல் என்றால்
நாணம்தானே சன்யாசமா
ஆண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் : பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
பெண் : வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ
கட்டிக் கட்டிக் கொஞ்சும்
இன்பம் இன்று மட்டுமோ
ஆண் : இன்று மட்டுமோ என்றும் வருமோ
காலம் செல்ல செல்ல உள்ளம்
வேகம் கொள்ளுமோ
பெண் : சுகம் பொல்லாதது
ஆண் : முடிவில்லாதது
பெண் : சுகம் பொல்லாதது
ஆண் : முடிவில்லாதது
பெண் : அந்த சொர்க்கம் கூட
பக்கம் வந்தால் நில்லாதது
ஆண் : அங்கே அச்சம் நாணம் வெட்கம்
எல்லாம் செல்லாதது
ஆண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் : பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை…..