Singer : P. Susheela

Music by : S. Vedhachalam

Lyrics by : Vaali

Female : Aagasa panthalilae
aayiram poo poothirukkum
Aanaalum nilavu vandha
Alliyai thaan parthirukkum
Aagasa panthalilae …..

Female : Thendral vandhu oonjalkatta
Aalamaram vizhudhu vidum
Thendral vandhu oonjalkatta
Aalamaram vizhudhu vidum
Thaen kuyilgal paatisaikkavae
Thaen kuyilgal paatisaikkavae
Thennai maram thalai asaikkum
Thennai maram thalai asaikkum
Aagasa panthalilae …

Female : Thaamaraiyil thaen edukka
Vandu vandhu sathamidum
Thaamaraiyil thaen edukka
Vandu vandhu sathamidum
Poo viriyum nerathilae
Poo viriyum nerathilae
Poruthirunthu muthamidam
Poruthirunthu muthamidam
Aagasa panthalilae …

Female : Nel vilaya pul vilaya
Neer odai nilam kizhikkum
Nel vilaya pul vilaya
Neer odai nilam kizhikkum
Alaigalilae medai kattiyae
Alaigalilae medai kattiyae
Annamellam kadhaiyalakkum
Annamellam kadhaiyalakkum

Female : Aagasa panthalilae
aayiram poo poothirukkum
Aanaalum nilavu vandha
Alliyai thaan parthirukkum
Aagasa panthalilae …..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஆகாசப் பந்தலிலே
ஆயிரம் பூ பூத்திருக்கும்
ஆனாலும் நிலவு வந்தா
அல்லியைத்தான் பார்த்திருக்கும்
ஆகாசப் பந்தலிலே….

பெண் : தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட
ஆலமரம் விழுது விடும்
தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட
ஆலமரம் விழுது விடும்
தேன் குயில்கள் பாட்டிசைக்கவே
தேன் குயில்கள் பாட்டிசைக்கவே
தென்னை மரம் தலை அசைக்கும்
தென்னை மரம் தலை அசைக்கும்
ஆகாசப் பந்தலிலே …..

பெண் : தாமரையில் தேன் எடுக்க
வண்டு வந்து சத்தமிடும்
தாமரையில் தேன் எடுக்க
வண்டு வந்து சத்தமிடும்
பூ விரியும் நேரத்திலே……..
பூ விரியும் நேரத்திலே……..
பொறுத்திருந்து முத்தமிடும்
பொறுத்திருந்து முத்தமிடும்
ஆகாசப் பந்தலிலே…..

பெண் : நெல் விளைய புல் விளைய
நீரோடை நிலம் கிழிக்கும்
நெல் விளைய புல் விளைய
நீரோடை நிலம் கிழிக்கும்
அலைகளிலே மேடை கட்டியே
அலைகளிலே மேடை கட்டியே
அன்னமெல்லாம் கதையளக்கும்
அன்னமெல்லாம் கதையளக்கும்

பெண் : ஆகாசப் பந்தலிலே
ஆயிரம் பூ பூத்திருக்கும்
ஆனாலும் நிலவு வந்தா
அல்லியைத்தான் பார்த்திருக்கும்
ஆகாசப் பந்தலிலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here