Singer : Vani Jayaram

Music by : M. S. Viswanathan

Female : Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Magalaai piranthaththo uyiraai kalanthaththo

Female : {Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Magalaai piranthaththo uyiraai kalanthaththo} (2)

Female : Thaalaattu unakkaaga naan paadinaen
Thaayanbil enakkaaga nee padammaa

Female : ………………..

Female : Thaalaattu unakkaaga naan paadinaen
Thaayanbil enakkaaga nee padammaa
Un paattu thaen undu pasiyaaruven
Naan unthan madi meedhu ilaippaaruvaen

Female : Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam

Female : Elangovum kaanaatha en kannagi
Ezhil konjum aattaththil pon madhavai

Female : Elangovum kaanaatha en kannagi
Ezhil konjum aattaththil pon madhavai
Naan vaazhntha varalaru needhanammaa
Naanendrum neeyedrum verethammaa….
Naanendrum neeyedrum verethammaa….

Female : Ammaa un kalyaana naalum varum
Anantham paadaatho nadhashvaram
Unai vazhththa thenpaandi sangam varum
Kannae en iru kannil gangai varum
Kannae en iru kannil gangai varum

Female : Aagaayam kaanaatha sooryothayam
Ennaalum theyaatha santhirothyam
Magalaai piranthaththo uyiraai kalanthaththo

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ

பெண் : {ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ} (2)

பெண் : தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா

பெண் : ……………………

பெண் : தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா
உன் பாட்டு தேன் உண்டு பசியாறுவேன்
நான் உந்தன் மடி மீது இளைப்பாறுவேன்

பெண் : ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்

பெண் : இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி

பெண் : இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி
நான் வாழ்ந்த வரலாறு நீதானம்மா
நானென்றும் நீயென்றும் வேறேதம்மா….
நானென்றும் நீயென்றும் வேறேதம்மா……

பெண் : அம்மா உன் கல்யாண நாளும் வரும்
ஆனந்தம் பாடாதோ நாதஸ்வரம்
உனை வாழ்த்த தென்பாண்டி சங்கம் வரும்
கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்
கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்

பெண் : ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்திரோதயம்
மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here