Singers : P. Unnikrishnan and Sujatha

Music by : Sirpy

Chorus : Aaha aa….aaha….aa…aaaha….aa….
Aaha aa….aaha….aa…aaaha….aa….
Female : Aaha aa….aaha….aa…aaaha….aa….
Aaha aa….aaha….aa…aaaha….aa….

Male : Aagaayam pookkal virkka aarambikkum neram
Angangae peram pesi nirkkuthadi megam

Male : Aagaayam pookkal virkka aarambikkum neram
Angangae peram pesi nirkkuthadi megam

Male : Ottrai chedi mugilin muththaththil
Suvaasikkum kaarkaalam
Moongil kalli pachchai paampodu
Kai korththu kalyaanam
Kuttai vaal oonaan velikkul
Kudhiththaadum ursaagam
Koti vaththa poovai nenjil
Kondu vathu saerkkum jaalam

Male : Aagaayam pookkal virkka aarambikkum neram
Angangae peram pesi nirkkuthadi megam

Chorus : ……………..

Chorus : Aaha aa….aaha….aa…
Aaha aa….aaha….aa…

Male : Solakkadhir muttrum paruvaththil
Kili mookkil santhosam
Sooriyanin regai modhaamal
Sottum pani sangeetham

Chorus : Yaehae yaehae
Yae….yae….yaehaehae…..

Female : Solakkadhir muttrum paruvaththil
Kili mookkil santhosam
Sooriyanin regai modhaamal
Sottum pani sangeetham

Male : koppaliththa neerai yaanaigal
Thuppuvathil kuttraalam
Female : Kutti gangai ovvoru pullilum
Kudi yaerum vidiyarkkaalam

Male : Kuravai meen thaavi thazhuvaamal
Koozhaangal menmaiyillaiyadi
Kundrin mael vaanai kuththiyoru
Kudai seiyya aasaiyullathadi

Female : Vaanam mazhai thoovum paruvaththil
Varudum pudhu mann vaasam
Vaaikkaal vazhiyodum thanneeril
Kappal vida uththesam

Male : Aagaayam pookkal virkka aarambikkum neram
Female : Angangae peram pesi nirkkuthadi megam

Female : Aaha aa…aaha….aa…aaaha….aa….
Aaha aa….aaha….aa…aaaha….aa….
Naananaanaa naanaa naanaa naananaanaa nanaa naanaa

Chorus : ……………….

Male : Aattrangarai maraththin kilai maelae
Amarum oru meenkoththi
Arai pounil seithu tharuvomaa
Adharkkum oru mookkuththi

Chorus : Yaehae yaehae
Yae….yae….yaehaehae…..

Female : Aattrangarai maraththin kilai maelae
Amarum oru meenkoththi
Arai pounil seithu tharuvomaa
Adharkkum oru mookkuththi

Male : Adhikaalai sooriyan vaanaththil
Mani paarkkum kadikaaram
Female : Alangaaram seigira vaanil
Yaezhu vanna udhattu saayam

Male : Vallaarai laegiyam illaamal
Vaanavil nyapagam thondruthadi
Kalloori sendru padikkaamal
Kaththaazhai vaiththiyam paarkkuthadi

Female : Nadhiyora eechang keettrin
Naakku rompa neelam
Naanal yaen valainthathaendru
Nakkal panni pesum

Male : Aagaayam pookkal virkka aarambikkum neram
Female : Angangae peram pesi nirkkuthadi megam

Male : Ottrai chedi mugilin muththaththil
Suvaasikkum kaarkaalam
Moongil kalli pachchai paampodu
Kai korththu kalyaanam
Female : Kuttai vaal oonaan velikkul
Kudhiththaadum ursaagam
Koti vaththa poovai nenjil
Kondu vathu saerkkum jaalam

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : சிற்பி

குழு : ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
பெண் : ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்

பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்

ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓணான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்

பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்

குழு : …………………………

குழு : ஆஹ அ…..ஆஹ……ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ…..

ஆண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்

குழு : ஏஹே ஏஹே
ஏ……ஏ…..ஏஹேஹே…..

பெண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்

ஆண் : கொப்பளித்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
பெண் : குட்டி கங்கை ஒவ்வொரு புல்லிலும்
குடி ஏறும் விடியற் காலம்

ஆண் : குறவை மீன் தாவி தழுவாமல்
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்றின் மேல் வானை குத்தியொரு
குடை செய்ய ஆசையுள்ளதடி……

பெண் : வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்க்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்…..

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்

பெண் : ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
ஆஹ அ…..ஆஹ……ஆ……ஆஅஹ…….ஆ……
நானனானா நானா நானா நானனானா நானா நானா

குழு : ………………………

ஆண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி

குழு : ஏஹே ஏஹே
ஏ……ஏ…..ஏஹேஹே…..

பெண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி

ஆண் : அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
பெண் : அலங்காரம் செய்கிற வானில்
ஏழு வண்ண உதட்டு சாயம்

ஆண் : வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கத்தாழை வைத்தியம் பார்க்குதடி

பெண் : நதியோர ஈச்சங் கீற்றின்
நாக்கு ரொம்ப நீளம்
நாணல் ஏன் வளைந்ததென்று
நக்கல் பண்ணி பேசும்…..

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்

ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
பெண் : குட்டை வால் ஓணான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here