Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : {Aalayam enbathu veedaagum
Aasai veithaal
Aanandha maaligai pol aagum
Sevai seidhaal} (2)
Vanna poovai allum kaiyil vaasam undu
Nalla sevai seiyum nenjil deivam undu
Female : Lalalalalalalaa…(2)
Sani dha pa ma ga ri
Ni dha pa ma ga ri sa
Child : Sani dha pa ma ga ri
Ni dha pa ma ga ri sa
Female : Kannazhagu pappa ..
Hahaaa
Un kaigalai kattu..
Hahaaa
Un kai paarthu aayiram ullam vaazhum
Chinna chinna raja..
Hahaaa
En aruginil vaada..
Hahaaa
Un mugam paarthu aayiram illam vaazhum
Female : Aalayam enbathu veedaagum
Aasai veithaal
Aanandha maaligai pol aagum
Sevai seidhaal
Female : {Kaagitha poovil vaasam illai
Rojaavai vaithaan
Kaadhal konda raaniyin pakkam
Raajavai vaithaen} (2)
Kannadi un ullam kallam illaa penn ullam
Unnai kandu uravaadum peadhai en ullam
Female : Andhi padum podhum
En azhagiya veedu
Pon oliyaalae maanikka vannam kattum
Vennilavu vandhu
En illathai kandu
Thaan vilaiyaada ooridam ennai ketkkum
Female : Lalalalalalalaa…(4)
Female : Kodi koduthu uravinarodu
Vaazhvadhu thaan inbam
Kooda irundhu paadhi
Unbadhu per inbam
Irai podum ullangal
Endrum vaazhum deepangal
Illai endru solladha
Thanga kinnangal
Female : Nallavar illam idhu
Palkazhai kazhagam
Idhu nadamaadum deivangal
Koodum sangam
Kalakalappaaga nalla olimayamaaga
Dhinam kalyaana veedena
Vaazhum illam
Female : Aalayam enbathu veedaagum
Aasai veithaal
Aanandha maaligai pol aagum
Sevai seidhaal
Vanna poovai allum kaiyil vaasam undu
Nalla sevai seiyum nenjil deivam undu
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : {ஆலயம் என்பது வீடாகும்
ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும்
சேவை செய்தால்} (2)
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
பெண் : லல்லல்லா லல்லல்லா..(2)
சனிதப மகரி நிதபமகரிச
குழந்தை : சனிதப மகரி நிதபமகரிச
பெண் : கண்ணழகு பாப்பா..ஹாஹா
உன் கைகளைக் காட்டு..ஹா ஹா
உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்
சின்ன சின்ன ராஜா..ஹா..ஹா
என் அருகினில் வாடா..ஹா..ஹா ..
உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்
பெண் : ஆலயம் என்பது வீடாகும்
ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும்
சேவை செய்தால்
பெண் : {காகிதப் பூவில் வாசம் இல்லை
ரோஜாவை வைத்தேன்
காதல் கொண்ட ராணியின் பக்கம்
ராஜாவை வைத்தேன்} (2)
கண்ணாடி உன் உள்ளம் கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்
உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்
பெண் : அந்தி படும் போது என் அழகிய வீடு
பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்
வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு
தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்
பெண் : லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
பெண் : கோடி கொடுத்தும் உறவினரோடு
வாழ்வது தான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து
உண்பது பேரின்பம்
இரை போடும் உள்ளங்கள்
என்றும் வாழும் தீபங்கள்
இல்லை என்று சொல்லாத
தங்கக் கிண்ணங்கள்
பெண் : நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்
இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்
கலகலப்பாக நல்ல ஒளிமயமாக
தினம் கல்யான வீடென வாழும் இல்லம்
பெண் : ஆலயம் என்பது வீடாகும்
ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும்
சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு