Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam
Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam

Male : Kaalam vazhangum thunbaththai ellaam
Kanavaai maattum aalayam
Kaalam vazhangum thunbaththai ellaam
Kanavaai maattum aalayam

Male : Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam

Male : Saalai vazhiyae thaniyae sendraal
Thaanum varuvaal bhavaaniyae
Thaayae saranam endru vizhunthaala
Than kai koduppaal bhavaaniyae
Thaayae saranam endru vizhunthaala
Than kai koduppaal bhavaaniyae….

Male : Kaalaiyil manjal neeril moozhgi
Kaarigamaargal koodugindraar
Kattiya veppan selaigaludane
Kaaliyin perumai paadugindraar
Kattiya veppan selaigaludane
Kaaliyin perumai paadugindraar….

Male : Kaali thirisoozhi
Chorus : Kaali thirisoozhi
Male : Neeli jeganmadha
Chorus : Neeli jeganmadha
Male : Devi parasakthi
Chorus : Devi parasakthi
Male : Om sakthi bavani
Chorus : Bavani bavani

Male : Aalayamendraal aalayam
Adhuthaan periyapaalaiyam

Male : Thaliyai kaatti veliyai ninainthu
Thammai maranthae aadigindraar
Dharmam enbathai kaanathavargal
Sannithi muzhuvathum thedungindraar

Male : Paalaiyaththammaa iruppathai maranthu
Paavigal ellaam aadugindraar
Patta pagalil kangalai izhanthu
Paadhaiyai maattri odugindraar

Male : Thavaru nadanthaal paalaiyaththammaa
Sakthiyai angae kaattugindraal
Dharmam vellum enbathai solli
Thaayin perumaiyai naattugindraal…

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்
ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்

ஆண் : காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்……
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்……

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்

ஆண் : சாலை வழியே தனியே சென்றால்
தானும் வருவாள் பவானியே
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே…
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே…

ஆண் : காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி
காரிகைமார்கள் கூடுகின்றார்
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்…..
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்…..

ஆண் : காளி திரிசூலி
குழு : காளி திரிசூலி
ஆண் : நீலி ஜெகன்மாதா
குழு : நீலி ஜெகன்மாதா
ஆண் : தேவி பராசக்தி
குழு : தேவி பராசக்தி
ஆண் : ஓம் சக்தி பவானி
குழு : பவானி பவானி

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்
அதுதான் பெரியபாளையம்

ஆண் : தாலியைக் காட்டி வேலியை நினைந்து
தம்மை மறந்தே ஆடிகின்றார்
தர்மம் என்பதை காணாதவர்கள்
சன்னிதி முழுவதும் தேடுகின்றார்….

ஆண் : பாளையத்தம்மா இருப்பதை மறந்து
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்
பட்டப் பகலில் கண்களை இழந்து
பாதையை மாற்றி ஓடுகின்றார்

ஆண் : தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்
தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here