Singer : Saritha

Music by : M. S. Viswanathan

Female : Aam….bharathi pudhiya thamizhukku
Podappatta pillaiyaar suzhi
Thiruvallikkeni yaanai
Thindru vitta thamizh karumbu

Female : Thanakku santhaegam vantha pothellaam
Aam thamizh mozhi avanaiththaan
Than agaraathiyaa puratti paarththu kondathu

Female : Kosuvae unakku kodi namaskaaram
Veettukkul parakkum vimaanamae
En maamiyaar meni enna unakku meenampaakkamo

Female : Raaththiriyil anu irangi
Raththa soru unnukiraayae
Adhu enna saamiyaar
Raththamo suththamaayirukka
After all maamiyaar raththam
Adhu kozhuppu adhigam

Female : Aanaal ondru
Marumagalaal kuraikka iyalaatha
Maamiyaarin kozhuppai
Kosuvae nee kuraikkiraai
Unakku kodi namaskaaram kodi namaskaaram

Female : Pin kurippu
Aiyo paavam
Maamiyaarukku kosukkadi
Idhu kavithaiyaal
Marumagal kodukkum savukkadi

Female : En thalaivaa
Un peyarai oru paper-il ezhuthi
Adhai thadavi paar
Adhil eera pasai irukkum

Female : Yaenenil un thirunaamam
En udhattu echchilgalaal
Oru naalaikku aayiram
Muraigalukku mel
Kulippaatta pattathallavo

Female : Pin kurippu
Idhai padiththavudan
Un mookkil idhuvarai naarkaali pottu
Utkkaarnthu kondiruntha kobam
Ezhunthu irangi nadanthu poyirukka vendumae

Female : Pushpangal illai
Neerugalil kilaippaen aavaai
Etchilkal varaigindra viruththangal
Vandukkal avattrai vaasikka varugindrana
Vaadai kaattru avaigalai vimarchikka varugindrathu
Manithargal mattumae avaigalai thiruda varugiraargal

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆம்……பாரதி புதிய தமிழுக்கு
போடப்பட்ட பிள்ளையார் சுழி
திருவல்லிக்கேணி யானை
தின்று விட்ட தமிழ் கரும்பு

பெண் : தனக்கு சந்தேகம் வந்த போதெல்லாம்
ஆம் தமிழ் மொழி அவனைத்தான்
தன் அகராதியா புரட்டி பார்த்து கொண்டது

பெண் : கொசுவே உனக்கு கோடி நமஸ்காரம்
வீட்டுக்குள் பறக்கும் விமானமே
என் மாமியார் மேனி என்ன உனக்கு மீனம்பாக்கமோ

பெண் : ராத்திரியில் அணு இறங்கி
ரத்த சோறு உன்னுகிறாயே
அது என்ன சாமியார்
ரத்தமோ சுத்தமாயிருக்க
ஆப்ட்ரால் மாமியார் ரத்தம்
அது கொழுப்பு அதிகம்

பெண் : ஆனால் ஒன்று
மருமகளால் குறைக்க இயலாத
மாமியாரின் கொழுப்பை
கொசுவே நீ குறைக்கிறாய்
உனக்கு கோடி நமஸ்காரம் கோடி நமஸ்காரம்

பெண் : பின் குறிப்பு
அய்யோ பாவம்
மாமியாருக்கு கொசுக்கடி
இது கவிதையால்
மருமகள் கொடுக்கும் சவுக்கடி

பெண் : என் தலைவா
உன் பெயரை ஒரு பேப்பரில் எழுதி
அதை தடவி பார்
அதில் ஈர பசை இருக்கும்

பெண் : ஏனெனில் உன் திருநாமம்
என் உதட்டு எச்சில்களால்
ஒரு நாளைக்கு ஆயிரம்
முறைகளுக்கு மேல்
குளிப்பாட்ட பட்டதல்லவோ

பெண் : பின் குறிப்பு
இதை படித்தவுடன்
உன் மூக்கில் இதுவரை நாற்காலி போட்டு
உட்க்கார்ந்து கொண்டிருந்த கோபம்
எழுந்து இறங்கி நடந்து போயிருக்க வேண்டுமே

பெண் : புஷ்பங்கள் இல்லை
நீருகளில் கிளைப்பேன் ஆவாய்
எச்சில்கள் வரைகின்ற விருத்தங்கள்
வண்டுக்கள் அவற்றை வாசிக்க வருகின்றன
வாடை காற்று அவைகளை விமர்சிக்க வருகின்றது
மனிதர்கள் மட்டுமே அவைகளை திருட வருகிறார்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here