Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Kall thondri mann thondrum
Munn thondru thamizhae
Kavi mazhaiyil aadi varum
Kanni ilamayilae
Sollodu porul yendhi
Vilayaada vandhen
Thunai vendum thaayae
Ninn thiruvadigal vaazhga

Female : Podhigai malai uchiyilae
Purapatta thamizhae
Poongkavidhai vaan yeri
Thavazhndhu varum nilavae
Madhi ariyaa sirumagalum
Kavi paada vandhen
Mandrathil thunai nindru
Vaazhthuvaai thaayae

Male : Aang nadakattum

Male : {Aan kaviyai vella vandha
Penn kaviyae varuga
Nee arindhavatrai
Maraindhu nindru
Sabaiyinilae tharuga} (2)

Female : {Penn kaviyai vella vandha
Perumaganae varuga
Ungal pettagathai
Thirandhu vaithu
Porulai alli tharuga} (2)

Male : {Ilai illaamal pootha malar
Enna malarammaa} (2)
Female : {Adhu ilamai ponga
Veetrirukkum kanni malar aiyaa} (2)

Male : {Valai illaamal meenai pidikum
Dhesam enna dhesam} (2)
Female : {Adhu vaalibarin kannil ulla
Kaadhal ennum dhesam} (2)

Male : Aan kaviyai vella vandha
Penn kaviyae varuga
Female : Ungal pettagathai
Thirandhu vaithu
Porulai alli tharuga

Male : Kaadhal vandhaal
Meniyilae enna undaagum
Female : Adhu kanniyarai kandavudan
Kaalgal thallaadum

Male : Kaadhalithaal maraindhuvittaal
Vaazhvu ennaagum
Female : Anbu kaatugindra veridathil
Kaadhal undaagum

Male : Oru muraidhaan
Kaadhal varum thamizhar panpaadu
Female : Andha ondru edhu
Enbadhudhaan kelvi ippodhu

Male : Varuvadhellaam kaadhalithaal

Vaazhvadhu evaaru
Female : Thann vaazhkaiyaiyae
Kaadhalithaal puriyum appodhu

Male : Aan kaviyai vella vandha
Penn kaviyae varuga
Female : Ungal pettagathai
Thirandhu vaithu
Porulai alli tharuga

Male : Unnudaiya kelvikellaam
Avanga badhil sollittaanga
Inimae avanga kelvi kekalaamilla
Male : Mm kekka sollunga

Female : Thaadhi thudhu
Theedhu thathum
Thathai sollaadhu
Thoodhu thudhu othithadhu
Thudhu sellaadhu
Male : Ennadhu

Female : Thedhu thithu thothu
Theedhu dheivam varaadhu
Male : Ohoo hooo
Female : Indru thuthi thathum
Thathai vaazha thithithathodhu

Male : {Ennappaa idhu
Kelviyaa idhu enna ularraanga

Male : Hmm avanga onnum ularala
Needhaan thinarraa
Male : Naan thinarra dhaavadhu

Male : Pinna enna venumnaa
Nee tholviya oppuka
Avangalae artham solraanga

Male : Mudhalla arthathai
Solla sollunga appuram pesalaam
Male : Sari sollunga} (Dialogue)

Female : {Adimai thudhu
Payanpadaadhu kiligal pesaadhu
Anbu thozhi thudhu sendraal
Viraivil sellaadhu} (2)

Female : {Deivathaiyae thozhudhu
Nindraal payanirukaadhu} (2)
{Ilam themal konda kanni vaazha
Iniyadhu kooru} (2)

Female : Penn kaviyai vella vandha
Perumaganae varuga
Ungal pettagathai
Thirandhu vaithu
Porulai alli tharuga

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கல் தோன்றி மண் தோன்றும்
முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும்
கன்னி இளமையிலே
சொல்லோடு பொருள் ஏந்தி
விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே
நின் திருவடிகள் வாழ்க

பெண் : பொதிகை மலை உச்சியிலே
புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வான் ஏறி
தவழ்ந்து வரும் நிலவே
மதி அறியா திருமகளும்
கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று
வாழ்த்துவாய் தாயே

ஆண் : ஆங் நடக்கட்டும்

ஆண் : {ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை
மறைந்து நின்று
சபையினிலே தருக} (2)

பெண் : {பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக} (2)

ஆண் : {இலை இல்லாமல் பூத்த மலர்
என்ன மலரம்மா} (2)
பெண் : {அது இளமை பொங்க
வீற்றிருக்கும் கன்னி மலர் ஐயா} (2)

ஆண் : {வலை இல்லாமல் மீனை பிடிக்கும்
தேசம் என்ன தேசம்} (2)
பெண் : {அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்} (2)

ஆண் : ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
பெண் : உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக

ஆண் : காதல் வந்தால்
மேனியிலே என்ன உண்டாகும்
பெண் : அது கன்னியரை கண்டவுடன்
கால்கள் தள்ளாடும்

ஆண் : காதலித்தாள் மறைந்துவிட்டாள்
வாழ்வு என்னாகும்
பெண் : அன்பு காட்டுகின்ற வேறிடத்தில்
காதல் உண்டாகும்

ஆண் : ஒரு முறைதான்
காதல் வரும் தமிழர் பண்பாடு
பெண் : அந்த ஒன்று எது
என்பதுதான் கேள்வி இப்போது

ஆண் : வருவதெல்லாம் காதலித்தால்
வாழ்வது எவ்வாறு

பெண் : தன் வாழ்க்கையையே
காதலித்தால் புரியும் அப்போது

ஆண் : ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
பெண் : உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக

ஆண் : உன்னுடைய கேள்விக்கெல்லாம்
அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமே அவங்க கேள்வி கேக்கலாமில்ல
ஆண் : ம்ம் கேக்க சொல்லுங்க

பெண் : தாதி தூது
தீது தத்தும்
தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது
தூது செல்லாது
ஆண் : என்னாது

பெண் : தேது தித்து தொத்து
தீது தெய்வம் வராது
ஆண் : ஓஹோ ஹோ
பெண் : இன்று துத்தி தத்தும்
தத்தை வாழ தித்திததோது

ஆண் : {என்னப்பா இது
கேள்வியா இது என்ன உளறாங்க

ஆண் : ஹ்கும்ம் அவங்க ஒன்னும் உளறல
நீதான் திணர்ற
ஆண் : நான் திணர்றதாவது

ஆண் : பின்ன என்ன வேணுமனா
நீ தோல்விய ஒப்புக்க
அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண் : முதல்ல அர்த்தத்தை
சொல்ல சொல்லுங்க அப்புறம் பேசலாம்
ஆண் : சரி சொல்லுங்க} (டயலாக்)

பெண் : {அடிமை தூது
பயன்படாது கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது} (2)

பெண் : {தெய்வத்தையே தொழுது
நின்றால் பயன் இருக்காது} (2)
{இளம் தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு} (2)

பெண் : பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here