Singers : A. M. Raja and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Pulamai Pithan

Female : Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
Male : Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

Male : Panjam pasi endru edhu vaandha podhum
Manjal mugam thaanae pasi theerkka vendum
Female : Aaa…panjanai endraalum paai endra podhum
Konjidum thunai thaaane sugamaaga vendum
Male : Ondru irandendru moondraagum podhu
Ulagam namadhallavoo

Female : Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

Male : Kaadhal ilangandrin uruvaaga maari

Karthar varuvaaro nee sollu devi
Female : Karthar vadivaaga madi meedhu aadi
Kannan vandhaalum avan endhan aavi
Male : Emmadham endraalum ullangal
Serndhaal sammadham thaan allavoo

Female : Annai vadivaaga naan aaaga vendum
Unnai maravaamal uyir vaazha vendum
Male : Kannil vilaiyaadum maniyaaga vendum
Kaalam namakkaaga kaniyaaga vendum
Female : Indha manadhodu udalodu yaavum
Endrum unadhallavoo

Both : Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

பாடகர்கள் : ஏ. எம் . ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்

வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
ஆண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

ஆண் : பஞ்சம் பசி என்று எது வந்தபோதும்
மஞ்சள் முகம்தானே பசி தீர்க்க வேண்டும்
பெண் : ஆஅ ….பஞ்சணை என்றாலும் பாய் என்றபோதும்
கொஞ்சிடும் துணைதானே சுகமாக வேண்டும்
ஆண் : ஒன்று இரண்டென்று மூன்றாகும் போது
உலகம் நமதல்லவோ…..

பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

ஆண் : காதல் இளங்கன்றின் உருவாக மாறி
கர்த்தர் வருவாரோ நீ சொல்லு தேவி
பெண் : கர்த்தர் வடிவாக மடி மீது ஆடி
கண்ணன் வந்தாலும் அவன் எந்தன் ஆவி
ஆண் : எம்மதம் என்றாலும் உள்ளங்கள்
சேர்ந்தால் சம்மதம் தானல்லவோ…….

பெண் : அன்னை வடிவாக நான் ஆக வேண்டும்
உன்னை மறவாமல் உயிர் வாழ வேண்டும்
ஆண் : கண்ணில் விளையாடும் மணியாக வேண்டும்
காலம் நமக்காகக் கனியாக வேண்டும்
பெண் : இந்த மனதோடு உடலோடு யாவும்
என்றும் உனதல்லவோ……..

இருவரும் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here