Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Aanandha raagam
Ketkkum kaalam
Aanandha raagam
Ketkkum kaalam
Keezh vaanilae
Oli pol thondrudhae
Aayiram aasaigal
Ul nenjam paadaadho
Aanandha raagam
Ketkkum kaalam

Female : Thulli varum ullangalil
Thoodhu vandhu thendral solla
Thondrum engum
Inbathin aanadha thaalangalae

Female : Velli malai kolangalai
Alli konda megangalai
Kaanum nenjil
Pongattum sondhathin baavangalae

Female : Kallam indri
Ullangal thulli yezha
Katti konda
Ennangal mella vizha
Raagangal paada thaalangal poda
Vanengum pogadho
Aanandha raagam ketkkum kaalam
Laa laa la laa laa laa laa laa laa

Female : Vanna vanna ennagalum
Vandhu vizhum ullangalum
Vaanin meedhu
Oorvalam pogindra kaalangalae

Female : Chinna chinna minnalgalum
Sindhanaiyin pinnalgalum
Saerum bodhu
Thondridum aayiram kolangalae

Female : Indru mudhal inbangal ponghi varum
Indha manam engengum sendru varum
Kaaviya raagam kaattrinil ketkkum
Kaalangal aarambam

Female : Aanandha raagam
Ketkkum kaalam
Keezh vaanilae
Oli pol thondrudhae
Aayiram aasaigal
Ul nenjam paadaadho
Aanandha raagam
Ketkkum kaalam
Laa laa la laa laa laa laa laa laa

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

பெண் : துள்ளி வரும் உள்ளங்களில்
தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும்
இன்பத்தின் ஆனந்த தாளங்களே

பெண் : வெள்ளி மலைக் கோலங்களை
அள்ளி கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில்
பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே

பெண் : கள்ளம் இன்றி
உள்ளங்கள் துள்ளி எழ
கட்டி கொண்ட
எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட
வானெங்கும் போகதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா

பெண் : வண்ண வண்ண எண்ணங்களும்
வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது
ஊர்வலம் போகின்ற காலங்களே

பெண் : சின்ன சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது
தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

பெண் : இன்று முதல் இன்பங்கள்
பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும்
சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here