Singer : P. Bhanumathi

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Aanandha bhavanam yamunai karaiyinilae
Naan kanda ulagam illara kalaiyinilae
Naayagan devan naayagi devi
Nanmai anbu panbu ellaam devan poojai

Female : Aanandha bhavanam yamunai karaiyinilae
Naan kanda ulagam illara kalaiyinilae

Female : Sooriyan oliyai chandhiran vaangi
Tharuvathu polae kulamagalae
Thooyavalaaga maenmaiyai valarththu
Sorkkam pola illam kaanum deivam thaaimai

Female : Aanandha bhavanam yamunai karaiyinilae
Naan kanda ulagam illara kalaiyinilae

Female : Saththiyaththil vaazhum ullam kuththuvilakku
Antha thaththuvathai sollum intha kuththuvilakku
Aadidum thottil illaiyendraalum
Annai ullam pennukkundu arivaai maathaa

Female : Aanandha bhavanam yamunai karaiyinilae
Naan kanda ulagam illara kalaiyinilae

Female : Thaayaval veettil oru magalaavaal
Thazhuviya veettil marumagalae
Seedhaiyai kandu kodhaiyai kandu
Paadhai kandu sellum mangai koyil paavai

Female : Aanandha bhavanam yamunai karaiyinilae
Naan kanda ulagam illara kalaiyinilae

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே
நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே
நாயகன் தேவன் நாயகி தேவி
நன்மை அன்பு பண்பு எல்லாம் தேவன் பூஜை

பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே
நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே

பெண் : சூரியன் ஒளியை சந்திரன் வாங்கி
தருவது போலே குலமகளே
தூயவளாக மேன்மையை வளர்த்து
சொர்க்கம் போல இல்லம் காணும் தெய்வம் தாய்மை

பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே
நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே

பெண் : சத்தியத்தில் வாழும் உள்ளம் குத்துவிளக்கு
அந்த தத்துவத்தைச் சொல்லும் இந்த குத்துவிளக்கு
ஆடிடும் தொட்டில் இல்லையென்றாலும்
அன்னை உள்ளம் பெண்ணுக்குண்டு அறிவாய் மாதா

பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே
நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே

பெண் : தாயவள் வீட்டில் ஒரு மகளாவாள்
தழுவிய வீட்டில் மருமகளே
சீதையைக் கண்டு கோதையைக் கண்டு
பாதை கண்டு செல்லும் மங்கை கோயில் பாவை

பெண் : ஆனந்தபவனம் யமுனைக் கரையினிலே
நான் கண்ட உலகம் இல்லற கலையினிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here