Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Aandavanin thottathilae azhagu sirikkuthu
Aagayam boomiyengum ilamai sirikkuthu
Aandavanin thottathilae azhagu sirikkuthu
Aagayam boomiyengum ilamai sirikkuthu
Vendum mattum kulungi kulungi
Naanum sirippen..hahahaha…
Vendum mattum kulungi kulungi
Naanum sirippen..
Andha vidhiyai sirippinaalae viratti adippen

Female : Aandavanin thottathilae azhagu sirikkuthu
Aagayam boomiyengum ilamai sirikkuthu

Female : Kuzhandhaiyilae sirithathu thaan indha sirippu
Adhai kumari ponnu sirikkum bodhu enna veruppu
Kuzhandhaiyilae sirithathu thaan indha sirippu
Adhai kumari ponnu sirikkum bodhu enna veruppu
Porandhadhukku parisu indha….hahahahaha

Porandhadhukku parisu indha sirippu allavo
Idhu ponnukaaga iraivan thandha salugai allavaa

Female : Lalallaalalalaalalalaaa
Padhama idhama sirichaa sugama

Female : Aandavanin thottathilae azhagu sirikkuthu
Aagayam boomiyengum ilamai sirikkuthu

Female : Kulam kulama thavam irundhu kokku sirikkudhu
Adhu kotha povadhai marandhu meenum sirikkudhu
Kulam kulama thavam irundhu kokku sirikkudhu
Adhu kotha povadhai marandhu meenum sirikkudhu
Kulathai vittu karaiyil yeri nandu sirikkuthu
Kulathai vittu karaiyil yeri nandu sirikkuthu
Adhai kondu poyi undu paartha nariyum sirikkuthu

Female : Lalallaalalalaalalalaaa
Padhama idhama sirichaa sugama

Female : Aandavanin thottathilae azhagu sirikkuthu
Aagayam boomiyengum ilamai sirikkuthu
Vendum mattum kulungi kulungi
Naanum sirippen..
Andha vidhiyai sirippinaalae viratti adippen

Female : Aandavanin thottathilae azhagu sirikkuthu
Aagayam boomiyengum ilamai sirikkuthu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி
நானும் சிரிப்பேன்
வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி
நானும் சிரிப்பேன்
அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்

பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

பெண் : குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு
அதை குமரிப்பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு
குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு
அதை குமரிப்பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த ஹாஹாஹாஹா
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த சலுகை அல்லவா

பெண் : லலலலாலலலலலால…………
பதமா இதமா சிரிச்சா சுகமா

பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

பெண் : குளம் குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளம் குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டு கரையில் ஏறி நண்டு சிரிக்குது
குளத்தை விட்டு கரையில் ஏறி நண்டு சிரிக்குது
அதை கொண்டு போயி உண்டுப் பார்த்த நரியும் சிரிக்குது

பெண் : லலலலாலலலலலால…………
பதமா இதமா சிரிச்சா சுகமா

பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி
நானும் சிரிப்பேன்
அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்

பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here