Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vaali

Male : Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nee mannil vanthathikka
Unnai yaarum ondrum ketkavillai
Vithi kannai moodikondu
Theruvil erinthathoru vaanavillai

Male : En anbe en amuthae
Intha kaayam aarividum thoongu
En kannae en maniyae
Unnai thannanthaniyae nee thaangu

Male : Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai

Male : Kadavulin uruvam edhuvena
Mazhalai sirippilae ariya vaikindraai
Saetrilae valantha thaamarai
Malarai polavey nee thondrinaai

Male : Bhoomiyithu punithamillai
Aayiram asuthangal ullathu
Theeyilumae neenthi vara
Nee indru kattrukol nallathu

Male : Intha ulagam enbathu
Inba thunbam ulla pathaiyadaa
Nee muttimothi ezha
Vazhigal sollitharum geedhaiyada

Male : Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai

Male : Nadhiyilae vizhuntha ilaiyena
Unathu payanagal thodanthu pogattum
Alaivarum adutha thiruppathil
Unathu karai edhirilae thondridum

Male : Vaer engo sedi engo
Nee ingae thaniyaai pookkiraai
Vazhi thavari veettil vantha
Paravaiyai polavae paarkkiraai

Male : Nee kadavul ezhuthi vaitha
Mannil vantha kavithaiyadaa
Adhan idaiyil iru uyirgal
Seitha ezhuthupizhai paavamadaa

Male : Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai
Nee mannil vanthathikka
Unnai yaarum ondrum ketkavillai
Vithi kannai moodikondu
Theruvil erinthathoru vaanavillai

Male : Aaraaro paada ingu thaayumillai
Unai alli chellam konja yaarumillai

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண் : என் அன்பே என் அமுதே
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண் : கடவுளின் உருவம் எதுவென
மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே வளர்ந்த தாமரை
மலரைப் போலவே நீ தோன்றினாய்

ஆண் : பூமியிது புனிதமில்லை
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர
நீ இன்று கற்றுக்கொள் நல்லது

ஆண் : இந்த உலகம் என்பது
இன்ப துன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ
வழிகள் சொல்லித்தரும் கீதையடா

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண் : நதியிலே விழுந்த இலையென
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலைவரும் அடுத்த திருப்பத்தில்
உனது கரை எதிரிலே தோன்றிடும்

ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்
வழி தவறி வீட்டில் வந்த
பறவையைப் போலவே பார்க்கிறாய்

ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த
மண்ணில் வந்த ஒரு கவிதையடா
அதன் இடையில் இரு உயிர்கள்
செய்த எழுத்துப்பிழை பாவமடா

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here