Singer : Pavithra Chari

Music by : D. Imman

Lyrics by : Mani Amuthavan

Female : Aarathi aarathi
Nee kaattu nera
Paaratti seeratti
Poochooda pora

Female : Aanandha koochalundhaan
Vandhaachu kalyaana kaachalundhaane
Yen indha koochamum thaan undaachu
Vetkathil verkuthuthaanae

Chorus : Vandha valanju vandha
Pandha kuranju vandha
Minnuraale minnuraalae
Rombha azhaga

Chorus : Thandha manasu thandha
Sindhamaniya thandha
Vaanathula neenthuralae
Vanna iragaa

Female : Haa…aaa…

Male Chorus : Ennachu yedhaachu
Un pechu engadi pochu
Kanveechu kai veechu
Ellaa kammunnu aachu

Female : Aarathi aarathi
Nee kaattu nera
Paaratti seeratti
Poochooda pora

Female : Un panju dhegathula
Maappila maattuvaan thaaliyathaanae
Eeranju maasathula nee mella
Aattuva thooliyathanae

Chorus : Patta aninjikitta
Thotta sinungitta
Thikkuralae thikkuralae
Rombha pudhusa

Chorus : Sitta parandhukitta
Mitta minungitta
Nikkuralae sokkuraale
Ponnu dhinusa

Chorus : Vacha arii kotta nenja orasikitta
Ketti melam kettimelam
Kotti sirippa
Unna thazhuvi nikkum
Vanna valavi satham
Ketkkum padi kettum padi
Kattiyanaipaa

பாடகி : பவித்ரா சாரி

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : மணி அமுதவான்

பெண் : ஆராத்தி ஆராத்தி
நீ காட்டு நேரா
பாராட்டி சீராட்டி
பூச்சூட போறா

பெண் : ஆனந்த கூச்சலுந்தான்
வந்தாச்சு கல்யாண காச்சலுந்தானே
ஏன் இந்த கூச்சமும் தான்
வெட்கத்தில் வேர்க்குதுதானே

குழு : வந்தா வளஞ்சு வந்தா
பந்தா குறஞ்சு வந்தா
மின்னுறாளே மின்னுறாளே
ரொம்ப அழகா

குழு : தந்தா மனச தந்தா
சிந்தாமணிய தந்தா
வானத்துல நீந்துறாளே
வண்ண இறகா

பெண் : ஹா..ஆஅ

ஆண் குழு : என்னாச்சு ஏதாச்சு
உன் பேச்சு எங்கடி போச்சு
கண்வீச்சு கைவீச்சு
எல்லா கம்முணு ஆச்சு

பெண் : ஆராத்தி ஆராத்தி
நீ காட்டு நேரா
பாராட்டி சீராட்டி
பூச்சூட போறா

பெண் : உன் பஞ்சு தேகத்துல
மாப்பிள்ள மாட்டுவான் தாலியத்தானே
ஈரஞ்சு மாசத்துல நீ மெல்ல
ஆட்டுவ தூளியத்தானே

குழு : பட்டா அணிஞ்சிகிட்டா
தொட்டா சினுங்கிட்டா
திக்குறாளே திக்குறாளே
ரொம்ப புதுசா

குழு : சிட்டா பறந்துக்கிட்டா
மிட்டா மினுங்கிட்டா
நிக்குறாளே சொக்குறாளே
பொண்ணு தினுசா

குழு : வச்ச அரிசி கொட்ட
நெஞ்ச ஒரசிகிட்ட
கெட்டிமேளம் கெட்டிமேளம்
கொட்டி சிரிப்பா
உன்ன தழுவி நிக்கும்
மண்ண வளவி சத்தம்
கேட்கும்படி கேட்குபடி
கட்டியணைப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here