Singer : Sarala

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Aarambamae ippadithaan therinjiko
Solven purinjiko
Aasai varum vetkathilae marainjikko
Naanum sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu
Sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu

Female : Theriyadhadi enakku theriyadhadi
Puriyadhadi edhuvum puriyadhadi
Theriyadhadi enakku theriyadhadi
Puriyadhadi edhuvum puriyadhadi
Anubhavathil enakku munnae pirandhaayadi
Yaar yaaro ezhudhiyadhai padithaayadi

Female : Aarambathai nee arindhaal solladi
Konjam nilladi
Aasai nenjai nee azhaithu selladi
Neeyum ennuyir thozhi
Paadam sonnaval vaazhi
Ennuyir thozhi
Paadam sonnaval vaazhi

Female : Kai meedhu vaangi maar meedhu thaangi
Inbathai thaekki vaippaanae baakki

Female : Appodhu penmai pesaadhu unmai
Aanaalum ullam povendru thallum

Female : Pinmalai neram ennenna naerum
Ondraaga serum kannenna koorum

Female : Aarambamae ippadithaan therinjiko
Solven purinjiko
Aasai varum vetkathilae marainjikko
Naanum sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu
Sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu

Female : Athaanin pechu muthaaram aagum
Sathaana vaazhvin achaaram aagum

Female : Nee sonna inbam engae undaagum
Ponnaana dhegam ennenna aagum

Female : Thallaadum kaalgal thaanaga pomo
Thaanaga ponaal thaenaagai pomo

Female : Aarambamae ippadithaan therinjiko
Solven purinjiko
Aasai varum vetkathilae marainjikko
Naanum sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu
Sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu

பாடகி : சரளா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ
சொல்வேன் புரிஞ்சுக்கோ
ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ
நானும் சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு
சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு

பெண் : தெரியாதடி எனக்கு தெரியாதடி
புரியாதடி எதுவும் புரியாதடி
தெரியாதடி எனக்கு தெரியாதடி
புரியாதடி எதுவும் புரியாதடி
அனுபவத்தில் எனக்கு முன்னே பிறந்தாயடி
யார் யாரோ எழுதியதை படித்தாயடி

பெண் : ஆரம்பமே நீ அறிந்தால் சொல்லடி
கொஞ்சம் நில்லடி
ஆசை நெஞ்சை நீ அழைத்து செல்லடி
நீயும் என்னுயிர் தோழி
பாடம் சொன்னவள் வாழி……..
என்னுயிர் தோழி
பாடம் சொன்னவள் வாழி…….

பெண் : கை மீது வாங்கி மார் மீது தாங்கி
இன்பத்தை தேக்கி வைப்பானே பாக்கி

பெண் : அப்போது பெண்மை பேசாது உண்மை
ஆனாலும் உள்ளம் போவென்று தள்ளும்

பெண் : பொன்மாலை நேரம் என்னென்ன நேரும்
ஒன்றாக சேரும் கண்ணென்ன கூறும்

பெண் : ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ
சொல்வேன் புரிஞ்சுக்கோ
ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ
நானும் சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு
சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு

பெண் : அத்தானின் பேச்சு முத்தாரம் ஆகும்
சத்தான வாழ்வின் அச்சாரம் ஆகும்

பெண் : நீ சொன்ன இன்பம் எங்கே உண்டாகும்
பொன்னான தேகம் என்னென்ன ஆகும்

பெண் : தள்ளாடும் கால்கள் தானாக போமோ
தானாக போனால் தேனாகி போமோ……

பெண் : ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ
சொல்வேன் புரிஞ்சுக்கோ
ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ
நானும் சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு
சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here