Singer : S. P. Shailaja

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female : Aarengum neerundu
Anaikkattuththaan vendum
Vaarum thozhargalae naam ondraai nindraal
Pani nandraai seithaal kaadugal solaigalae
Antha solaiyil veedugalae

Female : Ovvoru manithan vaazha orr illam vendum
Ellorkkum illam tharum ullam vendum
Kaigal undu ingae naam katti kolvom
Kanavugal vellum kaalam kaanbom

Female : Aarengum neerundu
Anaikkattuththaan vendum
Vaarum thozhargalae naam ondraai nindraal
Pani nandraai seithaal kaadugal solaigalae
Antha solaiyil veedugalae

Female : Kootturuvaalae vaazhum nam makkal suttrangal
Kolgaiyin meedhu nindraal dhinam kuraiyum kuttrangal
Aayiram kaigal saernthu oru thaalam thattu
Alavattra selvam kondu kuvippom

Female : Aarengum neerundu
Anaikkattuththaan vendum
Vaarum thozhargalae naam ondraai nindraal
Pani nandraai seithaal kaadugal solaigalae
Antha solaiyil veedugalae

Female : Kaalaththai vellum selvam
Nam pillai selvangal
Kadavulin koyil
Antha nal vellai ullangal
Naalai naattai aalum siry deivapillai
Nalam kondu naalum vaazha seiyyungal

Female : Aarengum neerundu
Anaikkattuththaan vendum
Vaarum thozhargalae naam ondraai nindraal
Pani nandraai seithaal kaadugal solaigalae
Antha solaiyil veedugalae…..

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆறெங்கும் நீருண்டு
அணைக்கட்டுத்தான் வேண்டும்
வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால்
பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே
அந்தச் சோலையில் வீடுகளே……

பெண் : ஒவ்வொரு மனிதன் வாழ ஓர் இல்லம் வேண்டும்
எல்லோர்க்கும் இல்லம் தரும் உள்ளம் வேண்டும்
கைகள் உண்டு இங்கே நாம் கட்டிக் கொள்வோம்
கனவுகள் வெல்லும் காலம் காண்போம்

பெண் : ஆறெங்கும் நீருண்டு
அணைக்கட்டுத்தான் வேண்டும்
வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால்
பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே
அந்தச் சோலையில் வீடுகளே……

பெண் : கூட்டுறவாலே வாழும் நம் மக்கள் சுற்றங்கள்
கொள்கையின் மீது நின்றால் தினம் குறையும் குற்றங்கள்
ஆயிரம் கைகள் சேர்ந்து ஒரு தாளம் தட்டு
அளவற்ற செல்வம் கொண்டு குவிப்போம்

பெண் : ஆறெங்கும் நீருண்டு
அணைக்கட்டுத்தான் வேண்டும்
வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால்
பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே
அந்தச் சோலையில் வீடுகளே……

பெண் : காலத்தை வெல்லும் செல்வம்
நம் பிள்ளைச் செல்வங்கள்
கடவுளின் கோயில் அந்த
நல் வெள்ளை உள்ளங்கள்
நாளை நாட்டை ஆளும் சிறு தெய்வப்பிள்ளை
நலம் கொண்டு நாளும் வாழச் செய்யுங்கள்

பெண் : ஆறெங்கும் நீருண்டு
அணைக்கட்டுத்தான் வேண்டும்
வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால்
பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே
அந்தச் சோலையில் வீடுகளே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here