Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae

Male : Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu

Male : Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Sattam illaatha sangangal
Dharmam paaraatha thangangal

Male : Kattidam jolikkirathu
Asthivaaram azhugirathu

Male : Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae

Male : Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Irutil eppothum inbangal
Velichcham vanthaalthaan thunbangal

Male : Inbangal thoonguvathillai
Thunbangaloom appadithaaan

Male : Paththu pathinondru pannirendu
Sothu pala kodi namakkundu
Pattra vaiyungal ippothu
Paavam santhippathu eppothu

Male : Uzhuuthavargal vaadugiraargal
Aruthavargal aadugiraargal

Male : Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu

Male : Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum
Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum

Male : Intha mandrathil aadungal
Antha mannippai koorungal
Iraivaa….aa….aa…
Ennai manniththuvidu…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே

ஆண் : பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது

ஆண் : இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் பாராத தங்கங்கள்

ஆண் : கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது….

ஆண் : ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே

ஆண் : யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்

ஆண் : இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்

ஆண் : பத்து பதினொன்று பன்னிரண்டு
சொத்து பல கோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது

ஆண் : உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்

ஆண் : ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது

ஆண் : தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்
தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்

ஆண் : இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்
இறைவா ஆஆ….
என்னை மன்னித்துவிடு…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here