Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Aasaikku pillai endru
Aandavanai kettadhundu
Pillai vandha nerathilae thalaeloo
Unnai petra manam vaadudhada thalaelo

Female : Nee pirandha neram enbaar
Indha nilai vandhadhenbaar
Naan pirandha neramada thalaeloo
Adhil veen pazhiyai nee sumandhaai thaleloo

Female : Naalai poluthu varum
Nallavarukku vaazhvu varum
Ezhai azhudha kanneer thalaeloo
Andha eesanukku puriyumada thalaeloo

Female : Muthu thamil paadu
sittu nadai podu
Thathi thathi vilaiyaadu
Nadai vandi thalli thalli nadamaadu

Female : Thandhaiyidam naesama
Annaiyidam aasaiyaa
Evaridam paasam endraal
Kaigal iru pakkam kattumada

Female : Muthu thamil paadu
sittu nadai podu
Thathi thathi vilaiyaadu
Nadai vandi thalli thalli nadamaadu

Female : Pattam melae pogudhu paaru
Paravai polae parakkudhu paaru
Vattamittu aadudhu paaru
aadudhu paaru
Melae vaalai neetti parakkudhupaaru parakkudhu paaru

Female : Noolai iluthaal melae pogum
Vaalai aruthaal karanam podum
Kaatru adithaal nimirndhu nirkkum
Kayiru arundhaal kuninji pakkum

Female : Vattamittu aadudhu paaru
aadudhu paaru
Melae vaalai neetti parakkudhu paaru parakkudhu paaru

பாடகி : பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆசைக்கு பிள்ளையென்று
ஆண்டவனைக் கேட்டதுண்டு
பிள்ளை வந்த நேரத்திலே தாலேலோ
உன்னை பெற்ற மனம் வாடுதடா தாலேலோ

பெண் : நீ பிறந்த நேரமென்பார் இந்த
நிலை வந்ததென்பார்
நான் பிறந்த நேரமடா தாலேலோ
அதில் வீண் பழியை நீ சுமந்தாய் தாலேலோ

பெண் : நாளை பொழுது வரும்
நல்லவர்க்கு வாழ்வு வரும்
ஏழை அழுதக் கண்ணீர் தாலேலோ
அந்த ஈசனுக்கு புரியுமடா தாலேலோ

பெண் : முத்துத் தமிழ் பாடு சிட்டு நடைப் போடு
தத்தி தத்தி விளையாடு
நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

பெண் : தந்தையிடம் நேசமா
அன்னையிடம் ஆசையா
எவரிடம் பாசமென்றால்
கைகள் இரு பக்கம் காட்டுமடா

பெண் : முத்துத் தமிழ் பாடு
சிட்டு நடைப் போடு
தத்தி தத்தி விளையாடு
நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

பெண் : பட்டம் மேலே போகுது பாரு
பறவைப் போலே பறக்குது பாரு
வட்டமிட்டு ஆடுது பாரு ஆடுது பாரு
ஆடுது பாரு
மேலே வாலை நீட்டி பறக்குது பாரு பறக்குது பாரு

பெண் : நூலை இழுத்தால் மேலே போகும்
வாலை அறுத்தால் கரணம் போடும்
காற்று அடித்தால் நிமிர்ந்து நிற்கும்
கயிறு அறுந்தால் குனிஞ்சி போகும்

பெண் : வட்டமிட்டு ஆடுது பாரு ஆடுது பாரு
ஆடுது பாரு
மேலே வாலை நீட்டி பறக்குது பாரு பறக்குது பாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here