Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Female : Than vaanathai theduthu oru nilavu

Adhu varumoo varadhoo
Than gaanathai theduthu oru veenai
Adhu varumo varadhoo

Female : Aasai ennum noolil aadi varum bommai
Vaasa malar ingu vaaduvadhu unmai
Aasai ennum noolil aadi varum bommai
Vaasa malar ingu vaaduvadhu unmai
Maaman magan illai maalaiyida solla
Maaman magan illai maalaiyida solla
Aththai magan illai anbu manam kolla
Aththai magan illai anbu manam kolla
Kaalam varum endru kaathirukkum indru

Female : Aasai ennum noolil aadi varum bommai
Vaasa malar ingu vaaduvadhu unmai

Female : Moondru kani ondraai moodi veitha dhegam
Moondru kani ondraai moodi veitha dhegam
Paavalargal paarthu paadi veitha raagam
En singaaram engindra sangeetham
Ellorkkum sandhosam undaakalaam
En mogangal aanandha logathai sandhikkum
Yogathai undakkalaam
En ullathil andraadum undaagum
Porattam yaar kandathoo

Female : Aasai ennum noolil aadi varum bommai
Vaasa malar ingu vaaduvadhu unmai

Male : Haaa….aaa…aa…haa…aaa…haa..aaa..aaa…
Uyarathil utkaarnthu oruvan ezhudhugindraan
Ezhudhi veitha naadagathil ellorum nadigindrom
Nadithu muditha pinnae vedathai kalaikkindrom
Vedthai kalaitha vudan paadathai marakkindrom

Male : Kanneeril aadum en kaadhal odam
Yaaralae indru oor sera koodum
Kanneeril aadum en kaadhal odam
Yaaralae indru oor sera koodum
Nee aadum bothu naan ada kanden
Un kannil yekkam nizhalaada kanden

Male : En punaana nenjathai kannaana kannae
Un kaikondu thaalattavaa
En ullathai anbennum vellathil
Ennaalum ooyaamal neerattavaa
Nee nanjalli thandhaalum
Thaen alli thandhaalum
Naan unnuven

Humming : ………………………..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தன் வானத்தை தேடுது ஒரு நிலவு
அது வருமோ வாராதோ தன்
கானத்தை தேடுது ஒரு வீணை
அது வருமோ வாராதோ

பெண் : ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை
வாச மலர் இன்று வாடுவது உண்மை
ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை
வாச மலர் இன்று வாடுவது உண்மை
மாமன் மகன் இல்லை மாலையிட சொல்ல
மாமன் மகன் இல்லை மாலையிட சொல்ல
அத்தை மகன் இல்லை அன்பு மனம் கொள்ள
அத்தை மகன் இல்லை அன்பு மனம் கொள்ள
காலம் வரும் என்று காத்திருக்க இன்று

பெண் : ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை
வாச மலர் இன்று வாடுவது உண்மை

பெண் : மூன்று கனி ஒன்றாய் மூடி வைத்த தேகம்
மூன்று கனி ஒன்றாய் மூடி வைத்த தேகம்
பாவலர்கள் பார்த்து பாடி வைத்த ராகம்
என் சிங்காரம் என்கின்ற சங்கீதம்
எல்லார்க்கும் சந்தோஷம் உண்டாக்கலாம்
என் மோகங்கள் ஆனந்த லோகத்தை சந்திக்கும்
யோகத்தை உண்டாக்கலாம்
என் உள்ளத்தில் அன்றாடம் உண்டாகும்
போராட்டம் யார் கண்டதோ

பெண் : ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை
வாச மலர் இன்று வாடுவது உண்மை

ஆண் : ஹா…ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ…ஹா…
உயரத்தில் உட்கார்ந்து ஒருவன் எழுதுகின்றான்
எழுதி வைத்த நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம்
நடித்து முடித்த பின்னே வேடத்தை கலைக்கின்றோம்
வேடத்தை கலைத்தவுடன் பாடத்தை மறக்கின்றோம்

ஆண் : கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம்
யாராலே இன்று ஊர் சேரக்கூடும்
கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம்
யாராலே இன்று ஊர் சேரக்கூடும்
நீ ஆடும்போது நான் ஆடக்கண்டேன்
உன் கண்ணில் ஏக்கம் நிழலாடக் கண்டேன்

ஆண் : என் புண்ணான நெஞ்சத்தை கண்ணான கண்ணே
உன் கைக்கொண்டு தாலாட்டவா
என் உள்ளத்தை அன்பென்னும் வெள்ளத்தில்
எந்நாளும் ஓயாமல் நீராட்டவா
நீ நஞ்சள்ளி தந்தாலும் தேன் அள்ளி தந்தாலும்
நான் உண்ணுவேன்

…………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here