Singer : Nivas K. Prasanna

Music by : Nivas K. Prasanna

Oppari : ……………………………

Male : Aaththa thottililae arai naali aadaliyae
Appan thozhmela ambaari yeralaiyae…aaa
Aaththa thottililae arai naali aadaliyae
Appan thozhmela ambaari yeralaiyae

Male : Thaai ootti thingakalaiyae
Thagapan idam thangalaiyae
Neeyootti valarthapullai
Thee mootta nikkiranae

Male : Thaai ootti thingakalaiyae
Thagapan idam thangalaiyae
Neeyootti valarthapullai
Thee mootta nikkiranae

Male : Ammaannu palliyilae
Arichuvadi padikkaiyilae
Akkaa thaan ellaamnu
Enni enni valandhenae

Male : Kunjukku panjaaram
Kodangaiyilae irunthathadi
Panjaaram kalanthathadi
Paathi uyir arunthathadi

Oppari : ………………………………..

Male : Kudicha thaai paalu
Kumattil irukkaiyilae
Idi vanthu vizhunthathunnu
Ellaarum sonnaaga
Paasatha parikoduthu
Paadhivali nikkirenae
Vamsamtha palikoduthu
Valiyaththu ponenae

Male : Ellaamaa thaan irunthu
Iththu ponavalae
Sollaama ponadhenga
Thudikkuthadi en usuru

Male : Ee erumbu andum-nnu
Imaikkaama irunthavalae
Oorumakka vanthiruchu
Urunguriyae mulippatheppo

Male : Maadu alaralaiyae
Valipoonai marikkalaiyae
Kaada saakkuruvi
Kaththi thaan kolaikaliyae
Kudi kavura poguthunnu
Kevuliyum sollaliyae
Maada velakkananju
Maranaththa kuraliyae

Male : Kattililae kuththa vachu
Kaal amukka nenachirunthen
Aal illaa kattilila
Kannurakkam kondathu yen

Male : Oor maala naan vaangi
Un aasi vaangumunnae
Neer maalai oor edukka
Nedunthookkam kondathu yen

Male : Eeraaru saarathil
Yetri vara naanirukka
Ooraaru adikkullae
Ulluranga ponathu yen

Male : En aaththa…aaaa….aa
En aaththa…
En aaththa…

Oppari : ………………………………..
Male : Aaththaa……

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஒப்பாரி : ……………………………..

ஆண் : ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே…ஆஅ
ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே…ஆஅ

ஆண் : தாய் ஊட்டி திங்கலையே
தகப்பன் இடம் தங்களையே
நீயூட்டி வளர்த்தபுள்ள
தீ மூட்ட நிக்கிறானே

ஆண் : தாய் ஊட்டி திங்கலையே
தகப்பன் இடம் தங்களையே
நீயூட்டி வளர்த்தபுள்ள
தீ மூட்ட நிக்கிறானே

ஆண் : அம்மான்னு பள்ளியிலே
அரிச்சுவடி படிக்கையிலே
அக்காதான் எல்லாம்னு
எண்ணி எண்ணி வளந்தேனே

ஆண் : குஞ்சுக்கு பஞ்சாரம்
கொடங்கையிலே இருந்ததடி
பஞ்சாரம் கலந்ததடி
பாதி உயிர் அருந்ததடி

ஒப்பாரி : ……………………………..

ஆண் : குடிச்ச தாய் பாலு
குமட்டில் இருக்கையிலே
இடி வந்து விழுந்ததுன்னு
எல்லாரும் சொன்னங்க
பாசத்த பறிகொடுத்து
பாதிவழி நிக்கிறேனே
வம்சத்த பலிகொடுத்து
வழியத்து போனேனே

ஆண் : எல்லாமாதான் இருந்து
இத்து போனவளே
சொல்லாம போனதெங்க
துடிக்குதடி என் உசுரு

ஆண் : ஈ எறும்பு அண்டும்னு
இமைக்காம இருந்தவளே
ஊருமுக்க வந்திருச்சு
உறங்குறியே முழிப்பதெப்போ

ஆண் : மாடு அலறலையே
வலிபூனை மறிகலையே
காட சாக்குருவி
கத்திதான் கொலைக்கலையே
குடி கவுர போகுதுன்னு
கெவுளியும் சொல்லலையே
மாட வெளக்கனஞ்சு
மரணத்த கூறலையே

ஆண் : கட்டிலிலே குத்த வச்சு
கால் அமுக்க நினைச்சிருந்தேன்
ஆள் இல்லா கட்டிலிலே
கண்ணுறக்கம் கொண்டது ஏன்

ஆண் : ஊர் மாலை நான் வாங்கி
உன் ஆசை வாங்குமுன்னே
நீர் மாலை ஊர் எடுக்க
நெடுந்தூக்கம் கொண்டது ஏன்

ஆண் : ஈராறு சாரத்தில்
ஏற்றி வர நானிருக்க
ஓராரு அடிக்குள்ளே
உள்ளுறங்க போனது ஏன்

ஆண் : என் ஆத்தா….ஆஅ….ஆ
என் ஆத்தா….
என் ஆத்தா….

ஒப்பாரி : …………………………….
ஆண் : ஆத்தா……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here